---Advertisement---

என் படத்துக்காக முதல்வர் வீட்டுக்குப் போகமாட்டேன் – தலைவா பிரச்சனைக்கு சி.எம்.ஐ சந்தித்த விஜய்…வைரலாகும் விஜயகாந்த் வீடியோ

Published on: March 19, 2026
vijay with vijayakanth
---Advertisement---

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர் விஜய் படங்கள் வெளிகிறது என்றாலே பிரச்சனைகளும் சேர்ந்தே வரும் என்பது எழுதப்படாத விதி. இவரது படங்கள் அரசியல் காரணங்களுக்காகவோ அல்லது பிற காரணங்களுக்காகவோ சிக்கல்களைச் சந்திப்பது இது முதல் முறையல்ல தலைவாவில் தொடங்கி ஜனநாயகன் வரை இது தொடர்கிறது. இப்போது அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். ஆனால் அரசியலுக்கு வரும்முன்பே அவரது படங்களுக்கு பிரச்சனைகள் வரத் தொடங்கின.

தலைவா தொடர்பான பிரச்சனைகளுக்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சென்று விளக்கம் அளித்தார் விஜய் மற்றும் அவரது தந்தை சந்திரசேகர். அதன்பின்னரே படம் வெளியானது. அதன்பிறகு வெளியான ‘மெர்சல்’ படத்தில் ஜிஎஸ்டி வசனப் பிரச்சனை , சர்கார் படத்தில் அரசியல் விமர்சனங்கள் எனப் பல படங்கள் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகளைச் சந்தித்தன. தற்போது, அவர் நடித்து வரும் ஜனநாயகன் படத்திற்கும் சென்சார் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்து கடும் நெருக்கடிகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், ஒரு முழுநேர அரசியல் கட்சித் தலைவராக மாறியபோதிலும் ஜனநாயகன் படப் பிரச்சனைக்கு விஜய் இதுவரை வெளிப்படையாக எந்தவொரு கண்டனத்தையோ அல்லது போராட்டக் குரலையோ எழுப்பாமல் இருந்து வருகிறார். இது அவர் மீதான நம்பிக்கையை குறைப்பதாகவே உள்ளது.

இந்த நிலையில், கேப்டன் விஜயகாந்த் பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில் பேசும் விஜயகாந்த், என் படத்திற்கு ஏதாவது பிரச்சனை வந்தால், அதற்காக நானே களத்தில் இறங்கிப் போராடுவேன். ஆனால், எந்தவொரு சூழ்நிலையிலும் முதலமைச்சர் வீட்டிற்குச் சென்று உதவி கேட்கவோ நிற்கவோ மாட்டேன் என்று கூறுகிறார்.

விஜய் மற்றும் விஜயகாந்த் ஆகிய இருவரின் வேறுபட்ட அணுகுமுறைகளையும் ஒப்பிட்டு இணையத்தில் ரசிகர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் விவாதித்து வருகின்றனர். அயிரம்தான் சொல்லுங்க கேப்டன் தில் யாருக்கும் வராது என்று கருத்துக்களை கூறிவருகின்றனர்.

வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்