அந்த விஷயத்தில் கமலை விட கேப்டனுக்குத்தான் முதலிடம்! தெரியாமல் மாஸ் காட்டிய சம்பவம்
கோலிவுட்டில் 80களில் தமிழ் சினிமாவையே தன் கட்டுக்குள் வைத்திருந்தவர்கள் நடிகர் ரஜினி மற்றும் நடிகர் கமல். ரஜினிக்கு கமல் சீனியர் ஆனாலும் ரஜினியின் என்ரி காலப்போக்கில் கமலுக்கு கொஞ்சம் பின்னடைவைத்தான் ஏற்படுத்தியது. அதன் பிறகு இருவரும் போட்டி போட்டுக் கொண்டு சினிமாவை ஆளத்தொடங்கினர்.
பாரபட்சமில்லாமல் இருவருக்குமே தொடர்ந்து பல படங்கள் வந்து கொண்டே இருந்தன. சரிசம வெற்றி தோல்விகளை பார்த்தும் வந்தனர். இப்படி இரு பெரும் துருவங்களாக சினிமாவை ஆட்கொண்டு வந்தவர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ஒரு நாயகன் உதிக்க தொடங்கினார்.
வில்லனாக அவதரித்த அவர் கிட்டத்தட்ட ரஜினிக்கு இணையாகவே பார்க்கப்பட்டார். அவர்தான் கேப்டன் விஜயகாந்த். பக்கா ஆக்ஷன் ஹீரோவாகவே களத்தில் இறங்கினார். அவரின் கெரியரில் சில மறக்க முடியாத படங்கள் ரசிகர்களுக்கு விருந்து படைத்தன.
அதிலும் இளையராஜாவின் இசையில் ஏகப்பட்ட விஜயகாந்த் ஹிட் பாடல்கள் அமைந்தன. ரஜினியே ஒரு சமயம் கேப்டனின் வளர்ச்சியை பார்த்து பயந்து போனார் என்றும் கூறுகின்றனர். மக்கள் படையை தன் நடிப்பின் மூலம் அதிகப்படுத்தினார் விஜயகாந்த்.
இந்த நிலையில் நடிகரும் இயக்குனருமான கரு.பழனியப்பன் கமல் மற்றும் விஜயகாந்த் பற்றி சில விஷயங்களை கூறினார். அதாவது அந்த காலங்களில் கமலுக்குத்தான் ஏகப்பட்ட பெண் ரசிகைகள் இருந்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
ஆனால் உண்மையிலேயே கமலை விட அதிகமான பெண் ரசிகைகளை கொண்டவர் விஜயகாந்த் தான் என்று கரு பழனியப்பன் கூறியிருக்கிறார். ஆனால் அது செய்தியாக வெளியாகவில்லை என்பதால் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பிருக்காது என்றும் கூறினார். வேண்டுமென்றால் பழைய தியேட்டர் அதிபர்களிடம் போய் கேட்டுப் பாருங்கள் , அவர்களே சொல்வார்கள் என்றும் கூறினார்.
இதையும் படிங்க : ‘எஜமான்’ படத்தால என் வாழ்க்கையே பாலா போயிருக்கும்! நல்லவேளை – பெருமூச்சு விட்ட நெப்போலியன்