நான் நடிக்கனும்னா இந்த நடிகரும் நடிக்கணும்!.. விஜயகாந்த் போட்ட கண்டிஷன்.. அட அவரா?!…

Published on: July 11, 2023
viji
---Advertisement---

தமிழ் சினிமாவில் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பால் அனைவரையும் மிரட்டி ஆண்டவர் நடிகர் பொன்னம்பலம். பல படங்களில் இவரின் வில்லத்தனமான நடிப்பு அனைவரையும் மிரள வைத்தது. தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழி படங்களிலும் நடித்து கிட்டத்தட்ட ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த பெருமைக்குரியவர் பொன்னம்பலம்.

viji1
viji1

பொன்னம்பலத்தின் உடல்நிலை

சமீபகாலமாக இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் மிகவும் அவதிப்பட்டு வந்த நிலையில் நடிகர்கள் பலரின் உதவியால் இன்று நல்ல முறையில் நம்மிடையே பேசி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பொன்னம்பலம் பல சுவாரசியமான சம்பவங்களை நம்மிடையே பகிர்ந்து இருக்கிறார்.

இதையும் படிங்க : விஜயகாந்த் திருமணத்தில் இளையராஜா செய்த கலாட்டா!. அவர் அப்பவே அப்படித்தான்!..

கடவுளாக விஜயகாந்த்

அதாவது அவரின் சிகிச்சைக்கு தனுஷ், சரத்குமார், சிரஞ்சீவி ஆகியோர் தக்கசமயத்தில் உதவி செய்து காப்பாற்றினார்கள்.அதிலும் சிரஞ்சீவி கிட்டத்தட்ட 58 லட்சம் வரை செலவு செய்திருக்கிறாராம். இது விஜயகாந்த் ரூபத்தில் தான் சிரஞ்சீவி எனக்கு உதவி செய்தார் என்று பொன்னம்பலம் கூறினார்.  குறிப்பாக விஜயின் வளர்ச்சியை பற்றி பொன்னம்பலம் ஒரு தகவலை கூறினார். செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்த் மட்டும் நடிக்கவில்லை என்றால் விஜய்க்கு இந்த அளவுக்கு பேரும் புகழும் வந்திருக்காது என்றும் அவருடைய இந்த அசுரத்தனமான வளர்ச்சிக்கு ஒரு பக்கம் அவருடைய தந்தை ஒரு காரணமாக இருந்தாலும் விஜயகாந்த் இன்னொரு காரணமாக இருக்கிறார் என்றும் கூறினார்.

viji2
viji2

இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் என்றாலும் இதே செந்தூரப்பாண்டி படத்தில் நான் நடிக்க வேண்டும் என்பதை சந்திரசேகரிடம் விஜயகாந்த் கேட்டுக் கொண்டதற்கு இணங்க என்னை நடிக்க வைத்தார் என்றும் “தமிழ் சினிமாவில் எனக்கு நிகராக சண்டை போடக்கூடிய ஒரே ஆள் பொன்னம்பலம் தான். அவர் இந்த படத்தில் நடித்தால் அது விஜய்க்கும் ஒரு நல்ல பெயர் கிடைக்கும்” என்றும் சந்திரசேகரிடம் விஜயகாந்த் கூறினாராம். அதன் காரணமாகவே செந்தூரப்பாண்டி படத்தில் நான் நடிப்பதற்கு வழிவகுத்தது என பொன்னம்பலம் தெரிவித்தார்.

இதையும் படிங்க : கிடப்பில் போடப்பட்ட விஜயகாந்த் படம்!.. இது மட்டும் வந்திருந்தா அவர் நிலமையே வேற!..

பணம்தான் எல்லாமே

மேலும் வடிவேலுவை பற்றி பொன்னம்பலத்திடம் கேட்டபோது “பணம் வருகிற வரைக்கும் தான் எல்லார் காலுலையும் விழுந்தார். எல்லாத்துக்கும் பணம் தான் காரணம்” என சூசகமாக தெரிவித்தார் பொன்னம்பலம். ஆனால் அவர் எப்பேர்ப்பட்ட நடிகர் என்றும் அவர் இந்த நிலையை அடைந்ததற்கு ஆரம்பத்தில் அவர் பட்ட கஷ்டங்கள் ஏராளம் என்றும் வடிவேலுவை பற்றி மிகவும் பெருமையாக கூறினார்.

அதேபோல விஜயகாந்திற்க்கும் வடிவேலுவிற்கும் இருந்த கருத்து வேறுபாடுகளை பற்றி கேட்டபோது “என்னதான் பகை இருந்தாலும் விஜயகாந்த்திடம் சென்று ஏன் இப்படி செய்தீர்கள் என ஒரு வார்த்தை கேட்டால் தன் மேல் தவறு இருந்தால் உடனே மன்னிப்பு கேட்கக்கூடிய ஆள் விஜயகாந்த்.ஆனால் அவரிடம் இந்த அளவு பகைத்திருக்கக் கூடாது” என்றும் தெரிவித்தார்.

viji3
viji3

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.