இதனால்தான் விஜயகாந்தை போய் பார்க்கவே இல்லை.. மனம் திறந்த வாகை சந்திரசேகர்..


vijayakanth 2
விஜயகாந்த் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர்.அன்றைய காலகட்டத்தில் ரஜினி கமலுக்கு இணையாக சம்பளத்தை பெற்று தனக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டவர். சுமார் 150 க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் . பிற்காலத்தில் அரசியல் மீது கொண்ட மோகத்தால் தனி ஒரு கட்சி ஆரம்பித்து முழு நேர அரசியல்வாதியாகவும் செயல்பட்டு வருகிறார்.

vagai chandra shekar
விஜயகாந்துக்கு திரையுலகில் நடிகர்கள் ராதாரவி, தியாகு மற்றும் வாகை சந்திரசேகர் ஆகியோர் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். அக்காலக்கட்டத்தில் திரையுலக பயணத்தின் போது நான்கு பேரும் ஒற்றுமையுடன் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். பிற்காலத்தில் அரசியல் காரணங்களாக நான்கு பேரும் தனி தனி திசைகளில் பயணிக்க தொடங்கின.இதில் தியாகு ஆறு மாதத்துக்கு ஒரு முறை விஜயகாந்தை சந்தித்து பேசும் வழக்கத்தை வைத்துள்ளார். ஒரு சில காரணங்களுக்காக ராதாரவி விஜயகாந்த் சந்திப்பதற்கு இன்று வரை பிரேமலதா மறுப்பு தெரிவித்து வருகிறார்.

vijayakanth with vagai chandra shekar
இதில் நடிகர் வாகை சந்திரசேகர் இன்று வரை விஜயகாந்தை சந்திக்க மறுப்பு தெரிவித்து வருகிறார். காரணம் அவரது உடல்நிலை தான். என்று சமூக வலைதளமான யூட்டிபில் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது அந்தக் காலத்தில் அவரது உடம்பு இரும்பு போன்ற பலம் கொண்டதாகவும் தேக்கு உடம்பாக வலிமையுடன் காணப்படுவார். குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகளை அதன் தரத்தை அறிய இரும்பு கம்பி மூலம் எடுப்பார்கள். ஆனால் விஜயகாந்த் அவரின் விரலை பயன்படுத்தி சாக்கு மூட்டையிலிருந்து நெல்களை எடுப்பார். அப்படி ஒரு வலிமை கொண்ட மனிதன். இன்று இருக்கும் நிலையைப் பார்த்து மனதிற்கு வருத்தம் அளிக்கிறது என்றார்.

vijayakanth
அன்று பலசாலியாக ஆயிரம் பேரை எதிர்க்கும் ஒரு தைரியம் கொண்ட மனிதர் இன்று உடம்பு சரியில்லாமல் இப்படி இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது என்றார். மேலும் நான் அவரை பார்க்கச் சென்றால் எனக்கு அழுகையே வந்துவிடும் என்றார். விஜயகாந்தின் இந்த நிலையை கண்டு மிகவும் வருத்தம் அளிக்கிறது என்றும் இக்காரணங்கலால் தான் நான் இன்னும் அவரை சந்திக்கவில்லை என்றும் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார்.