உண்மையான வீச்சருவா.. விஜயகாந்தின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய பிரபல நடிகர்!.. படப்பிடிப்பில் நடந்த பத பதைக்கும் சம்பவம்!..
தமிழ் சினிமாவில் மட்டும் கேப்டனாக இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் உண்மையான கேப்டனாக வாழ்பவர் நடிகரும் புரட்சிக் கலைஞருமான விஜயகாந்த். நிறத்தை வச்சு கேலி பண்ணிய கூட்டம் இன்று அவரையே மாபெரும் தலைவராக வைத்துக் கொண்டாடுகிறது.
எம்ஜிஆர் அவரை அடுத்து ரஜினி அதன் பின் விஜய் என்று சொல்லி வருகிறார்கள். ஆனால் அடுத்த உண்மையான எம்ஜிஆரே கேப்டன் விஜயகாந்த் தான். அந்த காலத்தில் எம்ஜிஆரின் படப்பிடிப்பு என்றால் மற்ற தொழில் நுட்பக் கலைஞர்கள் மிக ஆர்வமாக செல்வார்களாம். காரணம் அவர் போடும் சாப்பாடு தான்.
எம்ஜிஆரின் எண்ணம் ஈர்த்தது
அந்த அளவுக்கு சாப்பாடு போட்டு அன்பை பரிமாறியவர் எம்ஜிஅர். அதே போல் நாமும் கடைபிடிக்க வேண்டும் என்று எல்லாரையும் வயிறார சாப்பட வைத்தவர் விஜயகாந்த். இன்று எந்த பிரபலங்களிடம் கேட்டாலும் முதலில் சொல்வது விஜயகாந்த் போட்ட சாப்பாடு பற்றியதாகும்.
படப்பிடிப்பில் அவர் என்ன சாப்பிடுகிறாரோ அதே சாப்பாடு தான் கூட இருக்கிற கலைஞர்களுக்கும் கொடுக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் நிறைய பண உதவிகளும் செய்திருக்கிறார். இப்படி பல நல்ல விஷயங்களை செய்து வந்த விஜயகாந்த் பற்றி சமீபத்தில் ஒரு செய்தியை அவர் கூட நடித்தருவரும் திறமையான நடிகருமான தலைவாசல் விஜய் கூறியிருக்கிறார்.
சண்டைக் காட்சிகளில் வல்லவர்
விஜயகாந்த் படம் என்றாலே மக்கள் அதிகமாக விரும்புவது சண்டைக்காட்சிகள் தான். அவர் செய்யும் ஒவ்வொரு சண்டை காட்சிகளும் பெரிதளவில் ஈர்க்கும் வண்ணமாக இருக்கும். அதே வேளையில் சக நடிகருக்கு எதுவும் ஆகக்கூடாது என கண்ணும் கருத்துமாகவும் இருப்பார் விஜயகாந்த்.
அப்படி ஒரு சூழ்நிலை தான் அன்றும் நடந்திருக்கிறது. ஒரு படத்தில் தலைவாசல் விஜய் மற்றும் விஜயகாந்த் சண்டை நடைபெறும் காட்சி. அந்தக் காட்சிக்காக போலியான வீச்சரிவாள் ஏற்பாடு செய்யப்படவில்லையாம். ஆனால் அன்று அந்தக் காட்சியை எடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்துள்ளனர். விஜயகாந்த் யோசித்து பூஜையில் இருக்கும் அரிவாளை எடுத்துட்டு வா என்று சொல்லியிருக்கிறார்.
கெடு கொடுத்த கேப்டன்
அதே சமயம் தலைவாசல் விஜயிடம் ‘என் மேல் நம்பிக்கை இருக்கிறதா? உண்மைய வீச்சரிவாளை வைத்து தான் இந்த காட்சியில் நடிக்க போகிறோம். என் மேல் நம்பிக்கை இருந்தால் நடி’ என்று சொன்னாராம். அதாவது விஜயகாந்த் அரிவாளை வைத்து தலைவாசல் விஜயின் கையை வெட்ட வேண்டும் இது தான் காட்சி.
இதையும் படிங்க : “இடத்தை காலிபண்ணுங்க”… பிரபல இயக்குனரிடமே சத்தம் போட்டு கத்திய அறிமுக நடிகர்…
தலைவாசல் விஜய் எனக்கு ஒரு இரண்டு நிமிடம் அவகாசல் கொடுங்கள் என யோசிக்க ஆரம்பித்திருக்கிறார். ஒருவேளை எதாவது விபரீதமாக நடந்தால் எப்படியாவது 10 லட்சம் கொடுப்பார்கள், இல்லையென்றால் நல்ல விஷயம் தான். ஆனாலும் என்ன நடந்தாலும் விஜயகாந்த் நம்மள கைவிட மாட்டார் எனக் கருதி சம்மதித்திருக்கிறார்.
அந்தக் காட்சியில் தலைவாசல் விஜயின் ஒரு கை பின்னாடி கட்டப்பட்டு வாழைமரத்தை கை போன்று செட் பண்ணி தான் நடிப்பார்களாம். அவர் சம்மதத்திற்கு பின் மிக சாமர்த்தியமாக விஜயகாந்த் நடித்து எந்த பாதிப்பும் இல்லாமல் அந்த காட்சியை முடித்துக் கொடுத்திருக்கிறார் நம்ம கேப்டன்.