அன்னைக்கு விஜயகாந்துக்கு சட்டை கிழிஞ்சிடுச்சி. பட் நான் சேஃப்!.. அதிர்ச்சி கொடுத்த எஸ்.ஏ.சி...

by சிவா |   ( Updated:2023-07-15 02:41:52  )
அன்னைக்கு விஜயகாந்துக்கு சட்டை கிழிஞ்சிடுச்சி. பட் நான் சேஃப்!.. அதிர்ச்சி கொடுத்த எஸ்.ஏ.சி...
X

திரையுலகில் நன்றியுணர்வோடு இருப்பது எல்லாம் அரிதாகத்தான் பார்க்க முடியும். யார் காலை வாரிவிட்டு எப்படி மேலே வரலாம் என்றுதான் யோசிப்பார்கள். யாரிடமாவது உதவி பெற்றாலும், யார் மூலமாக வாய்ப்புகள் பெற்றாலும் அவர்களிடம் நன்றியுணர்ச்சியை எல்லாம் பெரும்பாலானோர் காட்ட மாட்டார்கள். ஆனால், சிலர் மட்டும் அதற்கு விதிவிலக்கு. அதில், விஜயகாந்த் முக்கியமானவர்.

sattam

போராடி சினிமாவில் மேலே வந்தவர். பல அவமானங்களை சந்தித்து ஹீரோ ஆனவர். ரஜினி படம் ஒன்றில் வில்லனாக நடிக்க கூட இவருக்கு வாய்ப்பு வந்தது. ஆனால், ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என காத்திருந்தார். விஜயகாந்தை ஹீரோ ஆக்கிய பெருமை விஜயின் அப்பா இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு உண்டு. சட்டம் ஒரு இருட்டறை படம் மூலம் விஜயகாந்தை கதாநாயகனாக நடிக்க வைத்து அவருக்கு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார். அந்த படம்தான் ரசிகர்கள் நம்மை ஹீரோவாக ஏற்றுக்கொண்டார்கள் என்கிற நம்பிக்கையை விஜயகாந்துக்கு கொடுத்தது.

Sattam oru Iruttarai

அதன்பின் சாட்சி, வீட்டுக்கு ஒரு கங்கை, சட்டம் ஒரு விளையாட்டு, நீதியின் மறுபக்கம், வசந்த ராகம்,ஆகிய படங்களில் எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயகாந்தை நடிக்க வைத்தார். 80களில் வெளியான இந்த படங்கள் விஜயகாந்த் தனது மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள முக்கிய காரணமாக இருந்தன. எனவே, எஸ்.ஏ.சந்திரசேகர் மீது மிகுந்த மரியாதையும், அன்பையும் வைத்திருந்தார்.

இதையும் படிங்க: நம்பி வந்த பெண்ணை தயாரிப்பாளருடன் அட்ஜெஸ்ட் பண்ண சொன்ன நடிகர்!!.. விரக்தியில் நடிகை எடுத்த முடிவு!..

sac

sac

இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர் ‘பல இயக்குனர்கள் படங்களில் நடித்தாலும் விஜயகாந்த் என்னை மட்டும்தான் ‘எங்க இயக்குனர்’ என உரிமையுடன் சொல்வார். சாட்சி படம் வெளியாகி சூப்பர் ஹிட்டாக ஓடி கொண்டிருந்தது. நானும், விஜயகாந்தும் ரசிகர்களை சந்திக்க ஊர் ஊராக சென்றோம். மதுரையில் ஒரு தியேட்டருக்கு சென்ற போது கூட்டத்தில் அவரை தள்ளிக்கொண்டு சென்றுவிட்டார்கள் ‘டைரக்டர் எங்கே’ என விஜயகாந்த் தேடிய போது நான் எங்கேயோ இருந்தேன்.

அடுத்து திருச்சிக்கு போன போது காரை விட்டு இறங்கியதும் எனக்கு பின்னால் நின்று கொண்டு அவரின் இரு கைகளையும் நீட்டிக்கொண்டு ‘நீங்க போங்க சார்’ என சொல்லிவிட்டு பாடிகாட் போல வந்தார். அவரை தாண்டி யாரும் என் மீது வந்து விழவில்லை. அவர் ஒரு தள்ளு தள்ளினால் பத்து பேர் போய் விழுவான். என் மீது அப்படி ஒரு மரியாதை அவருக்கு. அதை நான் மறக்கவே மாட்டேன்’ என எஸ்.ஏ.சி கூறியிருந்தார்.

இதையும் படிங்க: இரவில் செக்யூரிட்டி.. பகலில் ஆபிஸ் பாய்!.. படாதபாடு பட்ட பாண்டிராஜ்…

Next Story