வாரிசு பட நடிகரை வம்பிழுத்த தயாரிப்பாளர்… உள்ளே புகுந்து மிரட்டிய கேப்டன்… என்ன நடந்தது தெரியுமா?

by Arun Prasad |
Varisu
X

Varisu

விஜயகாந்த்தின் பெருந்தன்மையையும் உதவும் மனப்பான்மையையும் சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். தன்னிடம் உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு என்ன தேவையோ அதனை செய்துகொடுத்துவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பார் விஜயகாந்த். அதே போல் பசியோடு யார் இருந்தாலும் அவரால் தாங்கிக்கொள்ள முடியாது. உடனே அவரின் பசியை போக்கும் வள்ளலாக மாறிவிடுவார். இவ்வாறு விஜயகாந்த்தை குறித்து அவருடன் நெருங்கி பழகிய பலரும் பல பேட்டிகளில் அவரை புகழ்ந்து கூறுவதுண்டு.

Vijayakanth

Vijayakanth

அதே போல் சக நடிகர்களுக்கு எதுவும் பிரச்சனை வந்தாலும் அதனை தன்னுடைய பிரச்சனையாகவே பார்ப்பார் விஜயகாந்த். இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை இப்போது பார்க்கலாம்.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து வருபவர் ஷாம். சமீபத்தில் கூட விஜய்யின் “வாரிசு” திரைப்படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடித்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ஷாம், விஜயகாந்த் தனக்கு உதவியது குறித்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

Shaam

Shaam

ஒரு முறை ஷாம், ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது “சம்பள பாக்கியை தராமல் டப்பிங்கிற்கு வரமாட்டேன்” என கூறினாராம். அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஷாமை மிரட்டுவதற்காக அவரது வீட்டிற்கே ஆள் அனுப்பிவிட்டாராம்.

அப்போது ஷாம், விஜயகாந்த்திற்கு தொடர்புகொண்டு விஷயத்தை கூறினாராம். “நிம்மதியாக படுத்து தூங்குங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று கூறினாராம் விஜயகாந்த்.

Vijayakanth

Vijayakanth

அதன் பின் அந்த தயாரிப்பாளருக்கே தொலைப்பேசியில் அழைத்த விஜயகாந்த், “இனிமே இது என் பிரச்சனை. ஷாமை இனிமேல் தொந்தரவு பண்ணக்கூடாது” என கூறினாராம். மேலும் அந்த பிரச்சனையையும் தீர்த்து வைத்தாராம் விஜயகாந்த். அந்த சமயத்தில் விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அர்ஜூன் வாழ்க்கையில் அவருக்கே தெரியாமல் ஒளி ஏற்றி வைத்த விஜயகாந்த்… ஓஹோ இப்படி எல்லாம் நடந்துருக்கா?

Next Story