Cinema History
காலையில் ஒரு படம்… மாலையில் இன்னொன்னு… தூங்காமல் நடித்து கொடுத்த விஜயகாந்த்..! 56 நாட்களில் ரிலீஸ்..!
Vijayakanth: கோலிவுட்டில் ஒரே வருஷத்தில் 18 படம் நடித்து கொடுத்த பெருமைக்கு சொந்தக்காரர் விஜயகாந்த். அவரை வைத்து படம் எடுத்தால் போட்ட காசை எடுத்து விடலாம் என்பது பல தயாரிப்பாளர்களின் கணக்காகவே இருந்தது. தன்னுடைய நடிப்பால் வில்லனாக வந்தவர் பின்னர் ஹீரோவாக பல படங்களில் நடித்தார். அவர் படங்களில் அதிகமாக ரசிக்கப்பட்டதே ரியல் ஆக்ஷன் காட்சிகள் தான்.
அத்தனை தத்ரூபமாக இருக்கும். பின்னாளில் தன்னை எமோஷனல் ஹீரோவாகவும் காட்டி இருந்தார். அவரின் எல்லா படங்களுமே மினிமம் கியாரண்டி தான். படுத்தோல்வி அடைந்த படங்கள் எண்ணிக்கையை கை நீட்டி எண்ணிவிடலாம். அப்படி ஒருவர் தான் விஜயகாந்த். அவர் ஷூட்டிங்கில் இருந்த கதை எல்லாருக்கும் நிறைய நிறைய தெரியும். ஆனால் அவர் தயாரிப்பாளருக்கும் எல்லா நேரத்திலும் சரியான நடிகராகவே இருந்து இருக்கிறார்.
இதையும் படிங்க: அந்த சீனில் நடிக்க மறுத்த எம்ஜிஆர்…. சமாதான படுத்தி நடிக்க வைத்த எம்ஜிஆர்… எந்த படம்னு தெரியுமா?….
1981ம் ஆண்டு கோலிவுட்டில் விஜயகாந்தின் வருடம் என்றே சொல்ல வேண்டும். அவ்வளவு பிஸியாக இருந்தார். அவருக்கு தூங்க கூட நேரமே இல்லாமல் தொடர்ந்து ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாராம். ஆனால் ஏவிஎம் தயாரிப்பில் சிவப்பு மல்லி படத்தில் அவர் தான் நடிக்க வேண்டும் என்பதில் அந்த நிறுவனம் உறுதியாக இருந்துள்ளனர்.
இவர்கள் தொடர்ச்சியாக கேட்க கேப்டனால் மறுக்கவே முடியவில்லையாம். அவரும் நடிக்க ஓகே சொல்லிவிட்டார். இப்படத்தின் பூஜை 1981ம் ஆண்டு ஜூன் 20ல் நடந்தது. ஆனால் படத்தினை ஆகஸ்ட் 15ல் ரிலீஸ் செய்ய வேண்டும். இருப்பது 56 நாள் தான். 35 நாட்களில் மொத்த ஷூட்டிங்கை முடிக்க வேண்டும். இதே நேரத்தில் கமல்ஹாசன் சாட்சி படத்திலும் நடித்து வருகிறார். காலையில் சேலத்தில் நடக்கும் சாட்சி படப்பிடிப்பை முடித்து விடுவார்.
இதையும் படிங்க: கமலையே உப்புமா சாப்பிட வைக்க போராடிய படக்குழு.. கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா?