Connect with us
vijayakanth

Cinema History

திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருக்கேன்!. என்னா?!.. ஐ.டி.ரெய்டு அதிகாரிகளிடம் எகிறிய கேப்டன்!..

மறைந்த நடிகர் விஜயகாந்த் மிகவும் எவ்வளவு பாசமானவரோ அதே அளவுக்கு கோபக்காரர் என்பது எல்லோருக்கும் தெரியும். குறிப்பாக அவருடன் நெருங்கி பழகியவர்களுக்கு நன்றாகவே தெரியும். அவரது கோபம் என்பது நியாயமான காரணத்திற்காகவே இருக்கும் என பலரும் சொல்வார்கள். படப்பிடிப்பில் உணவு விஷயத்தில் இருந்த பாகுபாட்டை பார்த்து அவருக்கு வந்த கோபம்தான் எல்லோருக்கும் ஒரே மாதிரி உணவு என்பது.

அதுவும், தினமும் எல்லோருக்கும் கறி சாப்பாடு போட சொல்லுவார். செலவு அதிகம் என தயாரிப்பாளர் யோசித்தால் அதற்கான செலவை தனது சம்பளத்தில் பிடித்துக்கொள்ள சொல்லுவார். எல்லோருக்கும் உதவும் குணம் கொண்டவர். பிரச்சனை என அவரிடம் சென்றால் அவரால் என்ன முடியுமோ அதை செய்வார்.

இதையும் படிங்க: கோட் படத்தில் விஜயகாந்த் சீனைப் பார்த்த சூப்பர் ஸ்டார்… என்ன சொன்னார் தெரியுமா?

துவக்கத்தில் நிறைய அவமானங்களை பார்த்துவிட்டுதான் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்தார். அவருடன் நடிக்க அப்போது முன்னணியில் இருந்த நடிகைகளே மறுத்தனர். இதையெல்லாம் தாண்டி வந்தவர்தான் விஜயகாந்த். அவர் அரசியலுக்கு வந்த பின் பொது இடங்களிலேயே அவரின் கட்சி தொண்டர்களிடம் அவர் கோபப்பட்டதை பார்த்திருக்கிறோம்.

அவருக்கு நடிக்க தெரியாது என்பதுதான் அதற்கு முக்கிய காரணம். விஜயகாந்தின் கணக்கு வழக்குகளை பல வருடங்கள் நிர்வகித்து வந்தவர் அவரின் நண்பர் இப்ராஹிம் ராவுத்தார். விஜயகாந்துக்கு தனக்கு என்ன சம்பளம்?, தனது பெயரில் எங்கெல்லாம் சொத்துக்கள் வாங்கப்பட்டிருக்கிறது என்பது கூட தெரியாது.

இந்நிலையில்தான் ஒருமுறை வருமான துறை அதிகாரிகள் அவரின் வீட்டுக்கு வந்து சோதனை நடத்தினர். இப்ராஹிம் ராவுத்தரை ஒரு தனி அறையில் உட்கார வைத்துவிட்டார்கள். விஜயகாந்திடம் பல கேள்விகளை கேட்டார்கள். அவர்கள் என்ன கேட்டாலும் விஜயகாந்த் சொன்ன பதில் ‘எனக்கு தெரியாது’ என்பதுதான்.

vijayakanth

இதனால் கோபமடைந்த அதிகாரி ஒருவர் ‘மிஸ்டர் விஜயகாந்த்.. இப்படியே பதில் சொன்னா வேற மாதிரி ஆயிடும்’ என சொல்லகோபமடைந்த கேப்டன் ‘என்ன வேற மாதிரி ஆயிடும்?. எனக்கு தெரியாது.. அதான் திரும்ப திரும்ப சொல்றேன்ல’ என எகிற அங்கு களேபரம் ஆகிவிட்டது. அதன்பின் மற்றவர்களிடம் பேசியபோதுதான் விஜயகாந்துக்கு உண்மையிலேயே இதெல்லாம் தெரியாது என்பது அதிகாரிகளுக்கு தெரிய வந்திருக்கிறது.

ஆச்சர்யப்பட்ட அதிகாரிகள் ‘இப்படி ஒருவரை நாங்கள் பார்த்ததே இல்லை. இப்படி ஒருவர் இருக்கிறார் என்பதே எங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறது’ என சொல்லிவிட்டு போய்விட்டார்களாம். இந்த தகவலை விஜயகாந்துக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவரும், தயாரிப்பாளருமான டி.சிவா ஊடகம் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top