ரஜினிக்கு ஏற்பட்ட சங்கடம்… வாக்குறுதி கொடுக்கும் வரை அடம்பிடித்த கேப்டன்… என்னவா இருக்கும்??
“கேப்டன்” என செல்லமாக அழைக்கப்படும் புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் பெருந்தன்மையான மனதை குறித்து தனியாக கூறவேண்டும் என்ற அவசியம் இல்லை. உதவி என்று தேடி வருவோருக்கு, என்ன தேவையோ அதனை நிறைவேற்றிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார் விஜயகாந்த்.
குறிப்பாக தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களானாலும் சரி, தன் திரைப்படங்களில் பணியாற்றும் ஊழியர்களானாலும் சரி, தனக்கு பரிமாறப்படும் உணவு வகைகளைத்தான் அவர்களுக்கும் பரிமாறச்சொல்லுவார். அந்த அளவுக்கு பெருந்தன்மையான மனதை கொண்டவர்.
இந்த நிலையில் விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது, நடிகர் சங்கத்திற்கு பல கடன்கள் இருந்தது. ஆதலால் பல நடிகர்களை திரட்டி நட்சத்திர கலைவிழாக்களை நடத்தி, அதில் வரும் பணத்தின் மூலம் கடன்களை அடைக்கலாம் என முடிவு செய்தார் விஜயகாந்த்.
அப்போது வளர்ந்து வந்த நடிகர்களை எல்லாம் அழைத்துச் செல்ல முடிவெடுத்தார் விஜயகாந்த். ஆனால் டாப் நடிகர்கள் வந்தால்தானே கூட்டம் கூடும். ஆதலால் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோரிடம் சம்மதம் வாங்கவேண்டும் என முடிவு செய்தார் விஜயகாந்த்.
கமல்ஹாசன் விழாவிற்கு வர ஒப்புக்கொண்டார். ஆனால் ரஜினிகாந்த் சம்மதம் தெரிவிப்பதுதான் மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஒரு நாள் ரஜினிகாந்த்தின் வீட்டிற்குச் சென்ற விஜயகாந்த், சோபாவில் உட்காராமல் தரையிலேயே அமர்ந்திருந்தாராம்.
இதனை பார்த்த ரஜினிகாந்த், “ஏன் தரையில் உட்காந்திருக்கீங்க? ஷோபாவில் உட்காருங்கள்” என கூறினார். ஆனால் விஜயகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?
“நீங்கள் நட்சத்திர கலைவிழாவுக்கு வருவதாக ஒப்புக்கொண்டால்தான் நான் ஷோபாவில் உட்கார்வேன். அதுவரை நான் தரையிலேதான் அமர்ந்திருப்பேன்” என அடம்பிடித்தாராம். ரஜினிகாந்த் இதனை சங்கடமாக உணர “நான் நிச்சயமாக கலை நிகழ்ச்சிக்கு வருகிறேன். நீங்கள் தயவுசெய்து ஷோபாவில் உட்காருங்கள்” என சம்மதம் தெரிவித்துவிட்டாராம். தான் நினைத்ததை நடத்திக்காட்டுவதில் கேப்டன் கில்லாடிதான் என இதில் இருந்து நன்றாகப் புலப்படுகிறது.