Cinema History
எனக்கும் ராமராஜனுக்கும் இருந்த கருத்து வேறுபாடு! கேப்டன் சொன்ன ஒரே வார்த்தை – நளினி பகிர்ந்த சீக்ரெட்
தமிழ் சினிமாவில் 80களின் இறுதியில் முன்னனி நடிகையாக இருந்தவர் நடிகை நளினி. ஆரம்பத்தில் இவர் சினிமாவில் வருவதற்கு நளினியின் அம்மாவை தவிர மற்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தார்களாம். அதுமட்டுமில்லாமல் நளினி சினிமாவில் நடிக்க போகிறார் என்பதை அறிந்ததும் அவரது அப்பா மற்றும் அண்ணன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள்.
இருந்தாலும் அம்மாவின் ஆசைக்காக நளினி சினிமாவில் நடிக்க வந்திருக்கிறார். அவரின் கெரியரில் உயிருள்ளவரை உஷா படம் நளினிக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த படம் தான் நளினியின் முதல் படம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அதற்கு முன் மாவீரன் போன்ற இரண்டு படங்களில் நடித்திருக்கிறாராம் நளினி. ஆனால் உயிருள்ளவரை உஷா பட வெற்றிக்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் நடிக்க நளினிக்கு வாய்ப்பு வந்திருக்கிறது. விஜயகாந்த், ரஜினி, பிரபு என அனைத்து முன்னனி நடிகர்களுடனும் சேர்ந்து நடித்த நளினிக்கு நடிகர் ராமராஜன் மீது காதல் பிறந்தது.
இதையும் படிங்க : அஞ்சலியின் மயக்கத்தில் ஆட்டம் போட்ட ஹீரோ!..படாத பாடு படுத்திய அந்த நடிகர்!..
இருவரும் நளினியின் வீட்டை எதிர்த்து எம்ஜிஆர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு பிள்ளைகள் இருக்கும் பட்சத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இந்த நிலையில் இவர்களுக்கு பிரச்சினை ஏற்பட்ட சமயத்தில் நளினிக்கு உறுதுணையாக இருந்தவர் விஜயகாந்தாம்.
நளினியும் விஜயகாந்தும் கூட பிறந்த அண்ணன் தங்கை போல பழகுவார்களாம். கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் நளினிக்கு விஜயகாந்த் போன் செய்து கவலைப்படாதே, நான் இருக்கிறேன், என்ன வேண்டுமோ நான் பார்த்துக் கொள்கிறேன் என முதன் ஆளாக ஆறுதல் கூறியது கேப்டன் தானாம்.