Cinema History
விஜயகாந்தோடு நடிக்க மாட்டேன்!. கறாரா சொன்ன ரஜினி!.. கேப்டன் கொடுத்த பதிலடி…
மதுரையிலிருந்து சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்து வாய்ப்பு தேடி பல இடங்களிலும் அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு வாய்ப்புக்காக ஏங்கியவர்தான் விஜயகாந்த். விஜயராஜ் என்கிற தனது பெயரை ரஜினியை பார்த்து விஜயகாந்த் என வைத்துக்கொண்டார். ரஜினியை ஒருமுறை நேரில் சந்தித்து பேசிய போதுதான் விஜயகாந்துக்கும் நடிக்கும் ஆசை வந்ததாகவும் ஒரு செய்தி இருக்கிறது.
இனிக்கும் இளமை என்கிற படத்தில் வில்லன் வேடத்தில் அறிமுகமானார். அதன்பின் அவர் நடித்த திரைப்படம் தூரத்து இடி முழக்கம். அதன்பின் தொடந்து நடித்து வந்தார். ஆனால், அவருடன் இணைந்து நடிக்க நடிகரும் முன்வரவில்லை. நடிகர்கள் மட்டுமல்ல.. பல நடிகைகளும் விஜயகாந்துடன் நடிக்க மறுத்த காலம் அது. அப்படி பல வாய்ப்புகள் விஜயகாந்தின் கையை விட்டு போயிருக்கிறது.
இதையும் படிங்க: சின்ன வயசிலேயே உதவி செய்து அப்பாவிடம் அடி வாங்கிய விஜயகாந்த்.. அப்போது அவர் எடுத்த தீர்க்கமான முடிவு!..
எம்.ஜி.ஆர் சிவாஜியை வைத்து படங்களை இயக்கியர் பி. மாதவன். அன்னை இல்லம், எங்க ஊரு ராஜா, ராமன் எத்தனை ராமனடி, பட்டிக்காடா பட்டணமா, தெய்வத்தாய், வியட்நாம் வீடு என பல திரைப்படங்களை இயக்கியவர். இவர் ‘ என் கேள்விக்கென்ன பதில்’ என்கிற படத்தை இயக்கினார். இப்படத்தில் ரஜினிதான் ஹீரோ.
அவருக்கு தம்பியாக விஜயகாந்தை நடிக்க வைக்க நினைத்த மாதவன் விஜயகாந்திடம் இதை சொல்ல ‘எம்.ஜி.ஆர், சிவாஜியை வைத்து படம் எடுத்த உங்கள் இயக்கத்தில் நடிப்பதில் எனக்கு சந்தோஷம்.. கண்டிப்பாக நான் நடிக்கிறேன்’ என சொன்னார். இதைக்கேள்விப்பட்ட ரஜினி இயக்குனரை அழைத்து ‘இந்த படத்தில் நடிப்பது பற்றி நான் கொஞ்சம் யோசித்து சொல்கிறேன்’ என இழுக்க, என்ன காரணம் என சொல்லுங்கள் என இயக்குனர் கேட்க ‘நான் யாருடனும் இணைந்து நடிக்க மாட்டேன். அதையெல்லாம் விட்டுவிட்டேன்’ என சொன்னாரம்.
இதையும் படிங்க: எல்லோர் முன்னிலையிலும் கன்னத்தில் பளார்விட்ட விஜயகாந்த்.. வன்மம் வளர்த்து பழிவாங்கிய வடிவேலு!..
அதற்கு இயக்குனர் ‘இந்த படத்தில் நீங்கள்தான் ஹீரோ. விஜயகாந்த் உங்கள் தம்பியாக மட்டுமே நடிக்க போகிறார்’ என சொல்ல, ரஜினி திட்டவட்டமாக ‘விஜயகாந்தோடு நான் நடிக்க மாட்டேன். நீங்கள் வேறு ஹீரோவை வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்’ என சொல்லிவிட்டார். அதன்பின் அப்படத்திலிருந்து விஜயகாந்த் தூக்கப்பட்டு, அண்ணன், தம்பி என இரண்டு கதாபாத்திரங்களிலும் ரஜினியே நடித்தார். இந்த படம் 1978ம் வருடம் வெளியானது.
ஆனால், அதே விஜயகாந்த் ஹீரோவாக நடிக்க துவங்கி ஒரு கட்டத்தில் ரஜினி, கமல் படங்களுக்கே போட்டியாக வந்தார். ஒரே நேரத்தில் வெளியான ரஜினி, கமல், விஜயகாந்த் படங்களில் விஜயகாந்தின் படம் ரஜினி படத்தை விட அதிக வசூல் பெற்ற சம்பவமும் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ் தெரியாதுன்னு என்ன தூக்கிட்டாங்க!.. ஆனா அந்த ஹீரோ?!.. அவமானப்பட்ட விஜயகாந்த்…