எனக்கு கல்யாணம்!.. இந்த படம் ஹிட் அடிச்சே ஆகணும்!. இயக்குனருக்கு பிரசர் கொடுத்த கேப்டன்!..
பொதுவாக நடிகர் விஜயகாந்த் வெற்றி தோல்வியை பற்றி கவலைப்படமாட்டார். வெற்றியை தலைக்கு ஏற்றிக்கொள்ள மாட்டார். முடிந்த வரை கடுமையாக உழைத்து அவரின் நடிப்பை கொடுப்பார். படம் தோல்வி எனில் கலங்கி அமர மாட்டார். அடுத்த படத்திற்கான வேலையை துவங்கிவிடுவார்.
ஏனெனில், மிகவும் கஷ்டப்பட்டுதான் அவர் சினிமா உலகில் நுழைந்தார். பல அவமானங்களை பார்த்திருக்கிறார். பல நடிகைகளும் அவருடன் நடிக்க மாட்டேன் என சொல்லி இருக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டித்தான் அவர் சினிமாவில் நடிக்க துவங்கி தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
இதையும் படிங்க: மேக்கப் டெஸ்ட் எடுத்தும் நடிக்காமல் போன விஜயகாந்த்!… அவமானத்தில் நொந்துபோன கேப்டன்!..
துவக்கத்தில் அவர் நடித்த படங்கள் வெற்றிப்படங்களாக அமையவில்லை. அவரை வைத்து படமெடுக்க வேண்டாம் என பலரும் தயாரிப்பாளர்களிடம் சொன்னார்கள். அப்படி இருந்தும் எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் உருவான ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார்.
அதன்பின்னர்தான் மெல்ல மெல்ல வளர துவங்கினார். 90களில் அவரின் சில படங்கள் ஓடவில்லை. அப்போதுதான் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் புலன் விசாரணை படத்தில் நடிப்பது உறுதியானது. அப்போது செல்வமணியிடம் ‘இதுவரை 11 படங்கள் தோல்வி அடைந்துவிட்டது. இந்த படமும் ஓடவில்லை என்றாலும் எனக்கு பிரச்சனை இல்லை. இன்னும் என் கையில் 7 படங்கள் இருக்கிறது. ஆனால், உனக்கு இது முதல் படம். பார்த்து வேலை செய்’ என சொல்லியிருக்கிறார்.
இதையும் படிங்க: குறைந்த பட்ஜெட்!.. ஆனா பல கோடி லாபம்!.. விஜயகாந்த் படங்களின் லிஸ்ட் இதோ!..
‘என்னடா இப்படி சொல்லிவிட்டாரே’ என படத்திற்கான வேலையை பார்த்துகொண்டிருந்தார் ஆர்.கே.செல்வமணி. படம் பாதி வளர்ந்த நிலையில் விஜயகாந்துக்கு திருமணம் நிச்சயமானது. அப்போது செல்வமணியை அழைத்த விஜயகாந்த் ‘இந்த படம் ஹிட் அடித்தே ஆக வேண்டும். இல்லையேல் கல்யாணம் பண்ண நேரம், பொண்ணு வந்த நேரம் சரியில்லைனு பேச ஆரம்பிச்சிடுவாங்க. பாத்து பண்ணுங்க’ என சொல்லி இருக்கிறார்.
அப்படி ஆர்.கே.செல்வமணி எடுத்த அந்த படம் சூப்பர் ஹிட் அடித்து விஜயகாந்துக்கு சந்தோசத்தை கொடுத்தது. திருமண மேடையில் பேசிய விஜயகாந்த் ‘புலன் விசாரணை படம் வெற்றி பெற்றதற்கு நான் காரணமில்லை. இப்படத்தின் இயக்குனர் ஆர்.கே.செல்வமணியின் கடினமான உழைப்புதான்’ என சொல்லி அவரை பாராட்டினார்.