பார்வையாலே பாடம் நடத்திய விஜயகாந்த்!.. அது புரியாம 'திருதிரு'வென முழித்த இயக்குனர்...!
பிரபல நடிகரும் இயக்குனருமாக இருந்தவர் மணிவண்ணன். இவரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் ராதாபாரதி. டைரக்டர் ராதாபாரதி நடிகர் பிரசாந்தின் முதல் படமான வைகாசி பொறந்தாச்சு என்ற சூப்பர்ஹிட்டைக் கொடுத்தவர்.
இவர் மணிவண்ணனுடன் இணைந்து 24 மணி நேரம், அன்பின் முகவரி, அம்பிகை நேரில் வந்தாள், ஜனவரி 1 என 4 படங்கள் பணியாற்றியுள்ளார். இவருடன் இணைத்தவர் யார் என்றால் அது கேப்டன் விஜயகாந்த் தான். அவரைப் பற்றி ராதாபாரதி பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். என்னன்னு பார்ப்போம்.
விஜயகாந்த் சார் மற்றவர்களுடன் எல்லாம் ஜாலியாக பேசுவார். எல்லோரையும் அனுசரித்துப் போவார். ஆனால் என்னை மட்டும் முறைச்சி முறைச்சிப் பார்த்தார். 'இவரு ஏன் என்னை முறைக்கிறாரு'ன்னு இப்ராகிம்கிட்டயே கேட்டுட்டேன். 'சரிடா போடா. நான் கேட்குறேன்'னு சொல்லிட்டாரு.
அப்புறம் சாயங்காலம் அவரு வந்தாரு. 'டேய் ராதா இங்க வாடா. அண்ணன் எதுக்குத் தெரியுமா முறைச்சான்..? ஒரு தடவை அவன் சிரிச்சிட்டாக்கா நீ வந்து கேர்லெஸ்ஸா அங்க ஒர்க் பண்ணுவ. நம்ம சேர்த்து விட்ட ஆளு. கட் அண்ட் ரைட்டா இருக்கணும். அப்படிங்கறதுக்காகத் தான்டா உனக்கிட்ட மட்டும் அவன் விட்டுக் கொடுத்துருக்கான்.' அப்படின்னாரு பாருங்க. தூக்கி வாரிப் போட்டுருச்சு. 'ஆகா... இவரு எவ்வளவு பெரிய ஆசிரியர். பார்வையாலேயே நம்மள ஹேண்டில் பண்ணாரு. பாருங்க' என்கிறார் ராதாபாரதி ஆச்சரியம் குறையாமல்.
இதையும் படிங்க... விருது வாங்க போக கார் கூட இல்லாத நடிகை!.. எம்.ஜி.ஆர் செய்தது இதுதான்!.. நெகிழ்ச்சி சம்பவம்!…
வசனமே இல்லாம ஒரு ஹேண்ட்லிங் நடந்துக்கிட்டு இருக்கு பாருங்க. அப்படின்னு அவங்க மேல பெரிய மரியாதை. அதுக்கு முன்னாடி கோபமா இருந்தேன். அவங்களே சேர்த்து விட்டுட்டு அவங்களே முறைச்சி முறைச்சிப் பார்க்குறாங்களேன்னுட்டு. அப்புறம் அவரு ஒவ்வொரு படத்து ரிசல்ட்டையும் கேட்பாரு. சொல்வேன். அவன் கரெக்ட்டா சொல்லிட்டானே. சொன்னது மாதிரி அது ஓடுச்சே... நீ சொன்ன மாதிரி இது ஓடலேன்னு சொல்வார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.