‘ஷார்ட் ரெடி’ என்று சொன்னதும் எப்பொழுதும் விஜயகாந்த் செய்யும் முதல் காரியம்!.. இப்படி ஒரு மனுஷனா?..
தமிழ் சினிமாவில் மக்கள் மனதை வெகுவாக ஆட்கொண்டவர் புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் மதுரை மண்ணில் இருந்து கிளம்பி பின் ஒரு வெற்றி நாயகனாக மாறிய கதை அனைவரையும் பிரமிக்க வைக்கிறது. விஜயகாந்த் ஒரு கோபக்காரர், மேடை நாகரீகம் இல்லாதவர் என்ற விமர்சனத்தையும் தாண்டி,
கேப்டன் ஒரு மனிதாபிமானம் மிக்க ஒரு நல்ல மனிதர், அடுத்தவருக்கு ஒரு துன்பம் என்றால் முதல் ஆளாக வந்து உதவியை செய்யக்கூடியவர் என்று தமிழ் சினிமாவில் எம்ஜிஆருக்கு அடுத்தப்படியாக ஒரு கொடை வள்ளலாக விளங்கினார். சினிமா ஒன்றே குறிக்கோள் என்று நினைத்ததால் தன்னுடைய நிறம், உடல் என எதையும் நினைக்காமல் கிடைக்கிற கதாபாத்திரங்களில் நடித்தார் விஜயகாந்த்.
சினிமா எதிர்பார்ப்பதை முற்றிலும் மாற்றிக் காட்டியவர்.சினிமாவிற்கு அழகு முக்கியம் இல்லை, திறமை தான் முக்கியம் என்பதை தன் விடா முயற்சியாலும் தன்னம்பிக்கையாலும் சாதித்துக் காட்டியவர் கேப்டன். இந்த நிலையில் கேப்டன் விஜயகாந்தை பற்றி பல பேர் பேட்டியில் பேசாமல் இருக்கமாட்டார்கள்.
அந்த அளவுக்கு அனைவருக்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்திருக்கிறார். இந்த வகையில் மறைந்த பிரபல இயக்குனரான எஸ்.பி.ஜனநாதன் விஜயகாந்துடன் பணிபுரிந்த அனுபவத்தை ஒரு பேட்டியின் மூலம் கூறியிருக்கிறார். இயற்கை, ஈ, பேரான்மை போன்ற படங்களை இயக்கியவர் தான் ஜனநாதன்.
இவர் விஜயகாந்த் நடித்த அலெக்சாண்டர் என்ற படத்தில் பணிபுரிந்திருக்கிறார். அப்போது ஒரு சிஜி வேலை மட்டும் விட்டு வைத்திருந்தார்களாம். அதை எடுத்து விடலாம் என்று கேமிராக்களை ஏற்பாடு செய்து கொண்டிருக்க மேக்கப் அறையில் விஜயகாந்த் மேக்கப் போட்டு முடித்து தன் உதவியாளரை ஷார்ட் ரெடியா என்று கேட்க சொல்லியிருக்கிறார் விஜயகாந்த்.
எந்த நடிகரும் செய்யாததை விஜயகாந்த் செய்தார் என்று ஜனநாதன் கூறினார். அதாவது சினிமாவில் வேறெந்த நடிகரையும் நாங்கள் தான் ஷார்ட் ரெடி என்று சொல்லி அழைத்து வருவோம். ஆனால் விஜயகாந்த் அவருடைய வேலை முடிந்தால் முடிந்த அளவுக்கு ஷார்ட் ரெடியா என்று சில சமயங்களில் அவரே வந்து விடுவாராம்.
இதையும் படிங்க :சிவாஜியை பார்த்து மிரண்டுப்போன பிரபல இயக்குனர்… எம்.ஜி.ஆர் படத்தில் அறிமுகமான சுவாரஸ்ய சம்பவம்…
மேலும் ஒரு பெரிய விஐபி யாரிடமாவது பேசிக் கொண்டிருக்கும் போது ஷார்ட் ரெடி என்று சொன்னால் போதும் கொஞ்சம் கூட படக்குழுவை காத்திருக்க வைக்காமல் வந்த விஜபியை காக்க வைத்து விட்டு நடிக்க வருவார். இப்பொழுது உள்ள நடிகர்கள் யாரும் அப்படி செய்வார்கள் என்று சொல்லமுடியாது. விஐபிக்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். படக்குழுவை ஒரு நேரத்திலாவது வீணாக காக்க வைத்ததே இல்லை விஜயகாந்த் என்று அந்த இயக்குனர் பேட்டியில் கூறினார்.