விஜயகாந்தின் இந்த நிலைமைக்கு மாந்திரீகம்தான் காரணமா?.. பகீர் தகவலை சொன்ன பத்திரிக்கையாளர்!...

by Rohini |   ( Updated:2023-05-11 15:25:09  )
viji
X

vijayakanth

தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக நல்ல மனிதராக நல்ல அரசியல் தலைவராக வலம் வந்தார் விஜயகாந்த். இவருடைய வாழ்க்கையில் எப்பொழுதுமே இரண்டு பேருக்கு முக்கிய பங்கு உண்டு. ஒன்று எஸ் .ஏ .சந்திரசேகர் மற்றொருவர் அவருடைய நண்பரான இப்ராஹிம் ராவுத்தர். செல்வ செழிப்பில் வளர்ந்த விஜயகாந்த் சினிமா மீதுள்ள ஆசையின் காரணமாக சென்னை வந்தார். அவருடைய பள்ளி பருவத்திலேயே அவருக்கு நண்பர் ஆனாராம் ராவுத்தர்.

விஜயகாந்திற்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை, ராவுத்தருக்கோ படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை. இயல்பாகவே ராவுத்தருக்கு கதையின் மீது ஆர்வம் உடையவராக இருந்தாராம். அப்படித்தான் இருவரும் சினிமாவில் நுழைந்தார்களாம் .மேலும் விஜயகாந்தின் சினிமா வாழ்க்கையில் எஸ். ஏ .சந்திரசேகர் முக்கிய திருப்பு முனையாக அமைந்தார் .ஒரே வருடத்தில் 17 படங்களை இயக்கி விஜயகாந்திற்கு ஒரு நிலையான அந்தஸ்தை பெற்று தந்தார் சந்திரசேகர்.

viji1

viji1

ஊமை விழிகள் படம் வருவதற்கு முன்பு வரை விஜயகாந்த் ஒரு நடிகர் என்ற இடத்திலேயே இருந்திருக்கிறார். ஆனால் அந்தப் படத்திற்கு பிறகு தான் அவருக்கு ஒரு இமேஜ் உருவானதாம். புலன்விசாரணை படமும் அவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்று தந்தது. முரட்டுக்காளை படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கு ஜெய்சங்கருக்கு முன்னாடி விஜயகாந்தைத்தான் அணுகி இருக்கிறார்கள். அப்பொழுது வரை ஒருவேளை சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த விஜயகாந்த் வில்லன் கதாபாத்திரம் என்றாலும் பரவாயில்லை என்று ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்து அட்வான்ஸ் தொகையை பெற்றிருக்கிறார்.

ஆனால் நீ ஒரு ஹீரோ மெட்டீரியல், அதனால் வில்லன் கதாபாத்திரம் வேண்டாம் என்று அந்த அட்வான்ஸ் தொகையை அந்த நிறுவனத்திடமே திருப்பிக் கொடுக்குமாறு ராவுத்தர் சொல்லி இருக்கிறார். அவர் சொன்னதின் பேரிலேயே விஜயகாந்த் அப்படியே செய்திருக்கிறார் .இவ்வாறு விஜயகாந்தின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்தவர்களில் ராவுத்தர் மிகவும் குறிப்பிடத்தக்கவர்.

viji2

viji2

இப்படி நட்புக்கு இலக்கணமாக வாழ்ந்த விஜயகாந்த், ராவுத்தர் வாழ்க்கையில் பெரும் புயலாக வந்து அமைந்தது அவருடைய திருமண வாழ்க்கை. பல பேர் விஜயகாந்திருக்கு திருமணம் ஆனதற்கு பிறகுதான் ராவுத்தருக்கும் விஜயகாந்த் இருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது என்று சொல்கிறார்கள். அதுவும் ஒரு விதத்தில் உண்மைதான் என்று பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு கூறினார். மேலும் அவரிடம் நிருபர் ஒருவர் விஜயகாந்தின் உடல் ஆரோக்கியம் சீராக அமையாததற்கு காரணம் அவருடைய மனைவிதான் என்று கூறுகிறார்களே அது உண்மையா ?என்று கேட்டார்.

இதையும் படிங்க : கிண்டலுக்கு பதிலடி கொடுத்த சந்திரபாபு!.. மன்னிப்பு கேட்ட எம்.எஸ்.விஸ்வநாதன்….

அதற்கு பதில் அளித்த செய்யாறு பாலு "நானும் இதை பத்திரிகைகளில் தான் பார்த்தேன். அதாவது அவருக்கு ஏதோ மாந்திரீகம் செய்துவிட்டதாகவும் ஸ்லோ பாய்ஷன் கொடுத்ததாகவும், அவரின் வளர்ச்சியை தடுப்பதற்காகவும் இவ்வாறு செய்திருக்கிறார்கள் என்று அந்த செய்திகளில் பல தகவல்கள் வெளிவந்து கொண்டு இருந்தன. அது எந்த அளவுக்கு உண்மை என்று எனக்கும் தெரியவில்லை" என்று கூறினார்.

vjii3

vjii3

Next Story