Connect with us
Vijayakanth

Cinema History

கிடப்பில் போடப்பட்ட விஜயகாந்த் படம்!.. இது மட்டும் வந்திருந்தா அவர் நிலமையே வேற!..

விஜயகாந்த் ஆரம்ப கால வாழ்க்கை பயணம்!.

இன்றைய சினிமா வட்டாரங்களில் நிறைய நடிகர்கள் அவரவர் சொந்த விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் நிலையில் அந்த காலத்தில் நடிகர் விஜயகாந்த் போல யாரும் மற்றவர்களுக்காக யோசிக்கும் குணம் இப்ப இருக்கிற யாருக்குமே இருப்பதில்லை மாறாக நிறைய நடிகர்கள் தனக்குத் தெரிந்தவரை மட்டுமே திரைத்துறையில் வாய்ப்புக்காக சிபாரிசு செய்து வருகிறார்கள்.

ஆனால் நடிகர் விஜயகாந்த் அப்பொழுதே திறமை இருந்தால் போதும் உன்னை நான் மேலே தூக்கி விடுவேன் என்று அவருக்கு பின்னே நின்று நிறைய நடிகர்கள், துணை நடிகர்கள், டெக்னீசியன், ஒளிப்பதிவாளர்கள், எடிட்டர்கள் என்று சுமார் 400 பேருக்கு மேலாக சினிமா துறையில் பணியாற்ற வாய்ப்பு கொடுத்த இவரது கம்பெனியை போன்று எந்த ஒரு கம்பெனியும் செய்ததில்லை. அனைவருக்கும் வாழ்வில் முன்னேற உறுதுணையாக இருந்துள்ளார்.

விஜயகாந்த்

விஜயகாந்த்

அந்த வகையில் நடிகர் விஜயகாந்த் மதுரைக்கு அருகில் உள்ள திருமங்கலம் எனும் ஊரில் பிறந்தவர் ஆவார்.பள்ளி படிப்பினையும் அங்கேயே முடித்து இருந்தார். இளமை பருவத்திலேயே ஒரு மாணவி மீது காதல் கொண்டார் ஆனால் விஜயகாந்த் கருப்பாக இருப்பதன் காரணமாக அந்த காதலை ஏற்க மறுத்துவிட்டார் அந்த பெண்.ஆனால் நடிகர் விஜயகாந்த் பெரும் புகழ்ச்சி அடைந்த பின்பு அந்த பெண் மீண்டும் விஜயகாந்த்திடம் என்னை திருமணம் செய்து கொள்ளும் படி விஜயகாந்த் இடம் கூறினார்.ஆனால் விஜயகாந்த் பணம், அந்தஸ்து பார்த்து வரும் எந்த ஒரு காதலும் நிலையான காதல் இல்லை என்று கூறி அவரை அனுப்பி விட்டார்.

இந்த நிலையில் நடிகர் விஜயகாந்த் ஆரம்ப காலங்களில் பள்ளிக்கூடம் செல்வதை அறவே விரும்பாமல் இருந்தார். மேலும் தான் படித்த ஆங்கில படிப்பையும் அவருக்கு தலையில் ஏறவில்லை. ஆதலால் இதனை உணர்ந்த அவரது குடும்பத்தினர் இவருக்கு பொறுப்பு வருவதற்காக அரிசி ஆலை வைத்து கொடுத்திருக்கிறார்கள். அரிசி ஆலையை வைத்து பார்த்துக் கொண்டிருந்த நடிகர் விஜயகாந்த் அந்த வேலையில் உடன்பாடே இல்லை.தான் ஒரு சினிமா நடிகராக வேண்டும் என்ற கனவோடு இருந்தார்.

நடிகர் விஜயகாந்த் ஆனால் அந்தக் காலத்தில் நிறைய நடிகர்கள் எம் ஜி ஆர், சிவாஜி, கமல் போன்ற நிறைய நடிகர்கள் போல் வெள்ளையாக இருப்பதன் மூலமாக நடிகர்களாக மக்கள் முன்பு பெயர் பெற்றார்கள். ஆனால் என்னுடைய நிறமும் கருப்பு அதனாலேயே மக்களுக்கு என்னை பிடிக்காது என்று மனதில் நினைத்துக் கொண்டு நடிகராக நடிக்கும் முயற்சியை ஒதுக்கி வைத்திருந்தார்.

இதையும் படிங்க- https://cinereporters.com/ilayaraja-talk-in-actor-vijayakanth-wedding/விஜயகாந்த் திருமணத்தில் இளையராஜா செய்த கலாட்டா!. அவர் அப்பவே அப்படித்தான்!..

ரஜினியை பார்த்து திரைப்படத்திற்கு வந்த கதை:

அப்போதுதான் கருப்பு நிறத்தில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் மக்கள் முன்பு அவருடைய நடிப்பிற்கு வரவேற்பு கிடைத்ததன் மூலம் தனக்கும் இது போன்ற வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சினிமாவில் நடிக்க முயற்சி செய்தார் விஜயகாந்த். இதனை அடுத்து விஜயகாந்த் அவர்கள் தன்னுடைய வீட்டில் நான் நடிப்பதற்காக சென்னைக்கு செல்ல போகிறேன் எனக்கு இங்கு வேலை பார்க்க விருப்பமே இல்லை என்று வீட்டில் உள்ள அனைவரிடமும் தனது விருப்பத்தை தெரிவித்தார்.இதனை அடுத்து தனது நண்பர் ராவுத்தர் இப்ராஹிம் அவரையும் அழைத்துக் கொண்டு சென்னை சென்றார் நடிகர் விஜயகாந்த்.

இந்த நிலையில் இருவரும் சென்னையில் ஏவிஎம் ஸ்டுடியோவில் நேரடியாக போய் நடிப்பதற்கு நிறைய இயக்குனரிடம் வாய்ப்பு கேட்டிருக்கிறார்கள். ஆனால் விஜயகாந்தின் நிறத்தையும் அவரது வசன உச்சரிப்பையும் பார்த்து நிறைய இயக்குனர்கள் நிராகரித்திருக்கிறார்கள். இந்த நிலையில் தனது நிறத்தை வைத்து நிராகரிக்கும் இயக்குனரிடம் விஜயகாந்த் கூட கோபம் வரவில்லை, ஆனால் அவரது நண்பரான ராவுத்தர் இப்ராஹிம் அவருக்கு மிகுந்த கோபத்துடன் நிறைய இயக்குனர்களை வசை பாடி உள்ளார்.

விஜயகாந்த்

விஜயகாந்த்

இதனிடையே நிறைய இயக்குனர்களிடம் நடிப்புக்காக வாய்ப்புகளை தேடி வந்தார் விஜயகாந்த் மற்றும் ராவுத்தர் இப்ராஹிம். பிறகு இவர்களின் தேடலுக்கு ஒரு விடிவு காலம் டைரக்டர் எம் ஏ காஜா என்பவரின் இனிக்கும் இளமை எனும் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அந்தப் படத்தில் ஹீரோவாக சுதாகரன் அவர்கள் நடித்திருந்தார்கள் ஒரு வழியாக படத்தை இயக்குனர் அவர்கள் எடுத்து முடித்து விட்டார்கள் ஆனால் அதில் ஒரு சிக்கல் இருந்தது படம் வெளியாகும் தருவாயில் அவர்களுக்கு சில பணத்தொகை தேவைப்பட்டது.பிறகு ராவுத்தர் இப்ராஹிம் அவர்கள் மதுரையில் மிகப்பெரிய செல்வந்தராக இருப்பதன் மூலம் அந்த படத்திற்கு தேவையான காசோலையை வீட்டிலிருந்து எடுத்து வரச் சொல்லி இருந்தார். அதன் மூலமா அந்த படம் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் விஜயகாந்த்க்கு நிறைய திரைப்படங்களில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது. சில படங்கள் தோல்வி படமாக அமைந்தாலும் சில படங்கள் வெற்றி படமாகவும் அமைந்தது. இந்த நிலையில் நடிகர் விஜயகாந்த் அவர்கள் தூரத்து இடிமுழக்கம் எனும் திரைப்படத்தில் நடித்து வந்தார். அந்த படத்தில் நடித்த பூர்ணிமா தேவி அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஆனால் அந்த காதல் நீண்ட நாட்கள் நீடிக்க வில்லை.

இதுவரையில் வெளிவராமல் பெட்டிக்குள் மூடி கிடக்கும் விஜயகாந்தின் திரைப்படம்:

இதுவரையில் விஜயகாந்த் நடித்து முடித்து திரைக்கு வராமல் பெட்டிக்குள் முடங்கியே கிடக்கும் ஒரு திரைப்படத்தை பற்றி இதுவரையில் யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தை உங்களிடம் சொல்கிறேன், அந்த திரைப்படத்தின் பெயர் நூல் அருந்த பட்டம். இது 1970 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் இந்த திரைப்படம் தயாரிப்பாளர்களுக்கும் வினியோஸ்தர்களுக்கும் இடைப்பட்ட வாக்குவாதத்தில் படம் வெளியாகாமல் முடங்கிப் போய்விட்டது.

ஆனால் இந்த படத்தில் நடித்ததன் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் தற்சமயம் சூப்பர் ஸ்டார் ஆக திகழும் நடிகர் விஜய்யின் அப்பா எஸ் எஸ் சி சந்திரசேகர் அவர்களின் கண்களில் பட்டிருக்கிறார் நடிகர் விஜயகாந்த். இதனை அடுத்து சட்டம் ஒரு இருட்டறை எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

விஜயகாந்த்

விஜயகாந்த்

விஜயகாந்தின் திரைப்பயணம் ஆரம்பம்!..

இதனிடையே இந்த படம் ஆரம்பித்து பத்து நாட்கள் சூட்டிங் சென்று கொண்டிருந்தது. இயக்குனர் எஸ் எஸ் சி அவர்கள் விநியோகஸ்தர்களிடம் இந்த படத்தினை எப்படி விநியோகம் செய்வது பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார், அப்போது நிறைய விநியோகஸ்தர்கள் முன்னதாகவே இவரின் திரைப்படம் விநியோகம் செய்யாமல் முடங்கிக் கிடந்தது, நீங்கள் மீண்டும் எதற்காக இவரை வைத்து படம் எடுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இதனை அடுத்து எஸ் எஸ் சி அவர்கள் சற்று யோசிக்க ஆரம்பித்தார். பிறகு இந்த படத்தை அப்படியே டிராப் செய்துவிட்டு வேறு ஒரு நடிகரை இந்த படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்தார் இயக்குனர் எஸ் எஸ் சி. இந்த விஷயத்தை தயாரிப்பாளரான வலதூர் சிதம்பரம் அவரிடம் கூறினார்.

ஆனால் வலதூர் சிதம்பரம் அவர்கள் இந்த பையன் இப்போதுதான் வளர்ந்து வருகிறான் நன்றாகவே சண்டை போடுகிறான், நன்றாகவே நடனமும் ஆடுகிறான் இவனுடைய படத்தை எதற்காக பாதியிலேயே நிப்பாட்டுகிறீர்கள்? இந்த படத்தை எடுக்கவில்லை என்றாலும் நானே இந்த படத்தை விநியோகம் செய்கிறேன் என்று அவருக்கு உற்சாகம் கொடுத்தார் வலதூர் சிதம்பரம்.

இந்த நிலையில் படம் வெளியாகி தமிழ் மக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்ததன் மூலம் விஜயகாந்த் அவர்களுக்கு அடுத்தடுத்த திரைப்படத்தின் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் நிறைய சினிமா நடிகைகளுடன் பழக்கம் ஏற்பட்டு காதலில் விழுந்தார் நடிகர் விஜயகாந்த். இன்னும் நிறைய சுவாரசியமான எந்த மீடியாவிலும் வெளிவராத தகவல்கள் விஜயகாந்தை பற்றி உள்ளது. அதனை பின்வரும் பதிவுகளில் பார்ப்போம்.

இதையும் படிங்க- தூக்கி நிறுத்தி தூக்கத்தை கெடுக்கும் தர்ஷா குப்தா… வச்ச கண்ணு வாங்காம பாக்கும் புள்ளிங்கோ!..

google news
Continue Reading

More in Cinema History

To Top