அந்த ஒரு கோடியே இன்னும் தரலை... சர்வைவர் வெற்றியாளர் விஜயலட்சுமி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்....!
தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் படங்கள் மற்றும் சீரியல்களை தாண்டி மக்களை பொழுதுபோக்கும் விதமாக சில ரியாலிட்டி ஷோக்களை நடத்தி வருகிறார்கள். அதில் முக்கியமான நிகழ்ச்சி என்றால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.
இதற்கு அடுத்தபடியாக இந்நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடங்கிய நிகழ்ச்சி தான் சர்வைவர். பிரபல நடிகர் ஆக்சன் கிங் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சி சமீபத்தில் தான் நிறைவடைந்தது.
விஜயலட்சுமி, விக்ராந்த், இனிகோ என பல பிரபலங்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல நிகழ்ச்சி மீது ரசிகர்களுக்கு இருந்த ஆர்வம் குறைய தொடங்கியது. ஓரளவிற்கு சுமாரான வரவேற்பு தான் நிகழ்ச்சிக்கு கிடைத்தது.
இருப்பினும் ஒருவழியாக நிகழ்ச்சியை நடத்தி முடித்து விட்டார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் நடிகை விஜயலட்சுமி டைட்டில் ஜெயித்து ஒரு கோடி ருபாய் பரிசு தொகையையும் வென்றார். இந்நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் விஜயலட்சுமிக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு அதிகமாக கிடைத்தது.
ஆனால் ஒருகட்டத்திற்கு பின்னர் அவருக்கு நெகடிவ் கமெண்டுகள் அதிகமாக வர தொடங்கியது. இந்நிலையில் சமீபத்தில் இதுகுறித்து பேட்டியளித்த விஜயலட்சுமி, "என்னை பற்றி ட்ரோல்கள் தானாக வரவில்லை. மற்ற போட்டியாளர்கள் சிலர் பணம் கொடுத்து ஆட்களை ஏற்பாடு செய்து இப்படி நெகடிவ் கமெண்ட்களை போட வைத்திருக்கிறார்கள்" என அதிர்ச்சியான புகாரை கூறியுள்ளார்.
அதுமட்டுமல்ல இன்னும் பரிசுத்தொகை ஒரு கோடி ருபாய் அவருக்கு வழங்கப்பட்ட வில்லையாம். நிகழ்ச்சியின் விதிமுறைப்படி டெலிகாஸ்ட் முடிந்து இரண்டு மாதங்கள் கழித்து தான் பணம் கொடுப்பார்களாம். அதனால் பரிசுத்தொகை அவர் கைக்கு வர இன்னும் சில மாதங்கள் இருப்பதாக கூறியுள்ளார்.