நடிகராக வேண்டும் என்கிற ஆசையில் மதுரையிலிருந்து சென்னை வந்து வாய்ப்பு தேடியவர் விஜயகாந்த். பல அவமானங்களை சந்தித்த பின்னரே இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவர் நடித்த படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. ஆனாலும், நம்பிக்கையுடன் போராடி மேலே வந்தவர்.
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சட்டம் ஒரு இருட்டறை திரைப்படத்தின் வெற்றி விஜயகாந்தை கவனிக்க வைத்தது. ஆனால், அதன்பின் வெளிவந்த படங்கள் ஓடவில்லை. அதன்பின் அவர் நடித்து வெளியான சாட்சி அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. வைதேகி காத்திருந்தாள் படத்தின் வெற்றி விஜயகாந்தை ஒரு முன்னணி ஹீரோவாக மாற்றியது.
இதையும் படிங்க: கோட் படத்தில் விஜயகாந்த் சீனைப் பார்த்த சூப்பர் ஸ்டார்… என்ன சொன்னார் தெரியுமா?
உழவன் மகன், செந்தூரப்பூவே, பூந்தோட்ட காவல்காரன், புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், சின்னக் கவுண்டர் என அடித்து ஆடினார் விஜயகாந்த். ரஜினி, கமல் படங்களை விட விஜயகாந்தின் சில படங்கள் அதிக வசூலை பெற்ற சம்பவமும் நடந்தது. விஜயகாந்த் மிகவும் எளிமையானவர்.
எல்லோருக்கும் உதவும் குணம் கொண்டவர். பலரின் பசிக்கு சாப்பாடு போட்டவர். கஷ்டம் என யார் போனாலும் அவரால் முடிந்த உதவிகளை செய்வார் என்கிற நம்பிக்கை தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் இருந்தது. அதேபோல், தன்னை போல மற்றவர்களுக்கு உதவுபவர்களையும் விஜயகாந்துக்கும் பிடிக்கும். அவர்களுக்கு மரியாதையும் கொடுப்பார்.
தமிழ் சினிமாவில் பல புதிய இயக்குனர்களை அறிமுகம் செய்து வைத்தவர் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி. தொடர்ந்து பல படங்களை தயாரித்து வந்தவர். ஒருமுறை ஒரு படம் விஷயமாக பேச சவுத்ரி விஜயகாந்தின் வீட்டுக்கு போயிருக்கிறார் அப்போது அவரின் காலில் விழுந்திருக்கிறார் விஜயகாந்த்.
ஆர்.பி.சவுத்ரியிடம் வேலை செய்தவர் நடிகர் பாவா லட்சுமணன். அவரும் அப்போது உடனிருந்தார். அதன்பின் லட்சுமணிடம் பேசிய விஜயகாந்த் ‘நான் ஏன் சவுத்ரி காலில் விழுந்தேன் தெரியுமா?. அவர் 600 பேருக்கு தினமும் சாப்பாடு போடுகிறார். அவர் ஒரு சேட்டு. ஆனால், ஹிந்தி படம் எடுக்க போகாமல் தமிழ் படங்களை தயாரித்து வருகிறார். அதனால்தான் அவரின் காலில் விழுந்தேன்’ என சொன்னாராம். இந்த தகவலை லட்சுமணன் ஊடகம் ஒன்றில் கூறியிருக்கிறார்.