எனக்கு வாழ்க்கை கொடுத்ததே கேப்டன்தான்... எனக்கு என்ன செய்தார் தெரியுமா?..விஜய் சொன்ன சீக்ரெட்..
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நாயகனாக இருக்கும் விஜய் தனக்கு வாழ்க்கை கொடுத்ததே விஜயகாந்த் தான் என நடிகர் மீசை ராஜேந்திரனிடம் கூறியதாக ஒரு வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
தளபதி விஜய் கோலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர். நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகமான விஜய் பெரிதாக யாரையுமே கவரவில்லை. தொடர்ச்சியாக அவர் செய்த எல்லா படங்களுமே பி சென்டர் ஆடியன்ஸை மட்டுமே கவர்ந்தது.
ஒருகட்டத்தில் இவரால் சினிமாவில் சாதிக்க முடியாது என பலரும் பேசத்தொடங்கினார். இருந்தும் விடாப்பிடியாக நின்ற விஜயின் வளர்ச்சி அபரிமிதமானது. தொடர்ச்சியாக ஆக்ஷன் நாயகனாக உருவெடுத்தார். அவரை வைத்து படம் எடுத்தாலே நமக்கு வசூல் நிச்சயம் என தற்போது தயாரிப்பாளர்கள் எண்ணத் தொடங்கி விட்டனர். ஆனால் விஜய் இந்த நிலைமைக்கு வர காரணமாக இருந்தவர் விஜயகாந்த் என்பது பலருக்கும் தெரியாத செய்தி தான்.
விஜயகாந்தின் கேப்டன் டிவி அறிமுகமாக இருந்த நேரத்தில் பிரபலங்களிடம் ஒரு சின்ன வாழ்த்து செய்தி பெறுவதற்காக டிவி குழு விஜயை சந்திக்க சென்றனர். அவர்களுடன் சென்றது நடிகர் மீசை ராஜேந்திரன் தான். வாழ்த்து செய்தியை வீடியோ எடுத்தப்பின் விஜய் அவரிடம் பேசினாராம்.
அப்போது, விஜயகாந்த் எப்படி இருக்கிறார் எனக் கேட்டாராம். நல்லா இருக்காங்க சார் எனக் கூறினாராம் ராஜேந்திரன். தொடர்ந்து பேசிய விஜய், எனக்கு வாழ்க்கை கொடுத்ததே கேப்டன் தான். எங்க அப்பா என்னை வைத்து இரண்டு படம் இயக்கினார். அது ரெண்டுமே தோல்வியை தழுவியது.
கடன் 45 லட்சத்தை தாண்டி விட்டது. ஒன்று இருக்கும் வீட்டை விற்று கடனை கொடுக்க வேண்டும். இல்லை மீண்டும் ஒரு படம் எடுக்க வேண்டும். அப்போ, அப்பா விஜயகாந்திடம் சென்று என் மகன் ஹீரோவாக நடிக்கிறார். அவர் படத்தில் நீங்க நடித்து கொடுக்க வேண்டும் எனக் கேட்டாராம்.
உடனே யோசிக்க கூடவில்லை. நான் நடித்து தரேன் சார் என்றாராம் விஜயகாந்த். அப்படி உருவான படம் செந்தூர பாண்டி. அந்த படத்திற்காக ஒரு ரூபாய் கூட அவர் சம்பளம் வாங்கவில்லை என விஜய் மீசை ராஜேந்திரனிடம் பகிர்ந்து இருக்கிறார். இதுகுறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.