விக்ராந்த் மட்டுமல்ல விஜயிற்கு இன்னொரு தம்பி... விரைவில் தமிழ் சினிமாவில் இயக்குனராக இருக்கும் அவர் யார் தெரியுமா?

விஜய் – விக்ராந்த்
தளபதி விஜயின் இன்னொரு தம்பியும் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தினை பிடித்திருக்கும் விஜய். தற்போது வாரிசு படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் கிளைமேக்ஸ் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பொங்கல் தினத்தில் இப்படம் துணிவு படத்துக்கு போட்டியாக ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. இதன் பணிகளும் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Sanjeev
இவரின் சித்தி மகன் தான் நடிகர் விக்ராந்த். இவர் 2005 ஆம் ஆண்டு வெளியான கற்க கசடற என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ச்சியாக பல வாய்ப்புகள் வந்தாலும் இவரால் விஜயினை போல சினிமாவில் சரியான இடத்தினை பிடிக்க முடியவில்லை.

Sanjeev
ஆனால், விக்ராந்தின் தம்பி சஞ்சீவ் தற்போது கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறாராம். இவர் தற்போது விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து நடிக்கும் படத்தினை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. இதை தொடர்ந்து சஞ்சீவின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.