விஜய்க்கு போட்டி யாருமில்லங்க!... எஸ்.ஏ.சி தான்!.. தொடர்ந்து தனது வயித்தெறிச்சலை கொட்டி தீர்க்கும் இயக்குனர்..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக தன்னை நிலை நிறுத்தி வருபவர் நடிகர் விஜய். சமீபகாலமாக ஒரு வசூல் சக்கரவர்த்தியாகவே திகழ்ந்து வருகிறார். விஜய் படம் வருவதற்கு முன்பே அவருடைய மார்கெட் எகிறி விடுகிறது. மும்பை சென்செக்ஸ் ஏறுதோ இல்லயோ விஜய்க்கு உண்டான விளம்பரம் மளமளவென ஏறத் தொடங்கி விடுகிறது.
இப்பொழுது தான் தளபதி 67 பூஜை வீடியோவே வெளியாகியிருக்கிறது. ஆனால் அதற்குள்ளாகவே அந்த படத்தின் மீதான் டேபிள் பிராஃப்ட் கோடிக் கணக்கில் வசூல் ஆகியிருக்கிறது. இப்படி ஒரு தொட முடியாத உயரத்தில் இருக்கிறார் என்றால் அவருக்கு பின்னாடி அவரது கடின உழைப்பையும் தாண்டி அவரது அப்பாவின் முயற்சியும் இருக்கிறது.
அன்று மட்டும் நீ நடிக்க கூடாது , படிக்கத்தான் வேண்டும் என்று சொல்லியிருந்தால் இன்று இந்த வசூல் மன்னனை திரையுலகம் மிஸ் பண்ணியிருக்கும். ஆனால் எஸ்.ஏ.சி அவ்வாறு செய்யாமல் எத்தனையோ ஹீரோ, ஹீரோயின்களை அறிமுகப்படுத்தியவர் தன் மகனையும் அறிமுகப்படுத்தினார்.
விஜயை அறிமுகப்படுத்தியதன் விளைவு தன்னுடைய குறிக்கோளில் இருந்து விலகி வந்தார் எஸ்.ஏ.சி. ஏனெனில் புரட்சி சார்ந்த படங்களையே எடுத்து வந்தவர் விஜயை ஹீரோவாக்க வேண்டும் என்பதற்காக காதல் , ரொமான்ஸ் சம்பந்தப்பட்ட படங்களை எடுக்க ஆரம்பித்தார் எஸ்.ஏ.சி. அதனாலேயே என்னுடைய நிலைமை மாறி போய்விட்டது என்று சற்று வருத்தமாக ஒரு பேட்டியில் கூறினார்.
ஆனால் என்னுடைய மகன் விஜய் என்று சொல்வது போய் விஜயின் அப்பா நான் என்று சொல்வதை கேட்கும் போது பல தேசிய விருதுக்கு சொந்தக்காரனாக உணர்கிறேன் என்றும் கூறினார். மேலும் விஜயை எப்படியாவது ஹீரோவாக உருவாக்க வேண்டும் என்பதற்காக பல தியாகங்களை பண்ணியிருக்கிறேன் என்றும் கூறினார்.
அப்படி கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கியதன் விளைவு தான் அவர் இன்று ஒரு பெரிய ஹீரோவாக ஒரு இடத்தில் இருக்கிறார், ஆனால் நான்? என்று கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு பேசினார். இருந்தாலும் எஸ்.ஏ.சிக்கு கொஞ்சம் வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. என்னவெனில் விஜய்காக இவ்ளோ செய்திருக்கிறோம் ஆனால் நம் நிலைமை இன்று எப்படி இருக்கிறது என்பதை பற்றி வருத்தப்பட்டு பல பேட்டிகளில் பேசிவருகிறார் எஸ்.ஏ.சி.
இதையும் படிங்க : ‘துணிவு’ படம் வந்தாலும் வந்தது!.. இந்த நடிகருக்கு மவுசு கூடிருச்சுபா!.. இன்னும் ஏறுமுகம் தான்!..
COPYRIGHT 2024
Powered By Blinkcms