தமிழ் சினிமாவில் புது சாதனை படைக்கவிருந்த ரஜினி..! – ஆனால் விஜய் முந்திக்கிட்டார்… அப்படி ஒரு சம்பவம்!..

தமிழ் சினிமாவை பொறுத்தவரை டாப் நடிகர்கள் என்பது அவர்களது நடிப்பை பொறுத்து அமைவதில்லை. சினிமாவில் அவர்கள் வாங்கும் சம்பளத்தை வைத்தே அமைகிறது. உதாரணமாக தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் இருவரும் டாப் நடிகர்களாக பார்க்கப்படுகின்றனர்.
அதற்கு காரணம் மற்ற நடிகர்களை விடவும் இவர்கள் இருவரும் அதிக சம்பளம் வாங்குகின்றனர். இவர்கள் இருவரையும் விட தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கி வந்தர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் தற்சமயம் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அந்த படத்திற்கு பிறகு இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கிறார். லோகேஷ் கனகராஜ், ரஜினி கூட்டணிக்காக பலரும் காத்துள்ளனர்.
விஜய் செய்த சம்பவம்:
பல தயாரிப்பு நிறுவனங்கள் இந்த படத்தை தயாரிக்க முன் வந்துள்ளன. இந்த நிலையில் அந்த படத்திற்கு 200 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கலாம் என முடிவு செய்திருக்கிறார் ரஜினி. இதுவரை தமிழ் சினிமாவில் எந்த ஒரு நடிகரும் 200 கோடி ரூபாயை சம்பளமாக வாங்கியதில்லை. எனவே தமிழ் சினிமாவிலேயே முதன் முதலாக 200 கோடி வாங்கிய நடிகர் என்கிற பெயர் ரஜினிக்கு கிடைக்கும்.

vijay2
ஆனால் இந்த ஆசையை நிராசையாக்கும் விதமாக விஜய் ஒரு விஷயத்தை செய்துள்ளார். லியோ படத்திற்கு பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இந்த படத்திற்கு சம்பளமாக விஜய் 200 கோடி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அப்படி ஒருவேளை விஜய் 200 கோடி வாங்கும் பட்சத்தில் தமிழ் சினிமாவில் 200 கோடி சம்பளம் வாங்கிய முதல் நடிகராக விஜய்தான் இருப்பார் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மலைப்பிரதேசத்தில் கடும் குளிரிலும் 5 மணிக்கு ஷூட்டிங்கிற்கு வந்த சில்க் ஸ்மிதா!… என்ன ஒரு டெடிகேஷன்!