விஜய் வாய்ஸில் ஹிட் அடித்த சூப்பர் பாடல்கள்... இதுவும் அவர் பாடல் தானா?

by Akhilan |
விஜய் வாய்ஸில் ஹிட் அடித்த சூப்பர் பாடல்கள்... இதுவும் அவர் பாடல் தானா?
X

நடிப்பில் சக்கை போடு போட்டு வரும் தளபதி விஜய். பாடுவதிலும் கெட்டி தான். அவர் வாய்ஸில் சக்கை போடு போட்ட சூப்பர் ஹிட் பாடல் உங்களுக்காக.

ரசிகன்:

1994ம் ஆண்டு தேனிசை தென்றல் தேவா இசையமைத்த பாம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி பாடல் தான் விஜயின் முதல் பாடல். இப்பாடலை கவிஞர் வாலி எழுதியிருந்தார். விஜயுடன், சித்ரா இணைந்து பாடியிருந்தார்.

விஜய்

தேவா:

தேவா படத்தில் அதே கூட்டணியான தேவா மற்றும் வாலியுடன் இணைந்து தன்னுடைய இரண்டாவது பாடலை விஜய் பாடி இருந்தார். அய்யயோ அலமேலு எனத் துவங்கும் அப்பாடல் விஜயின் கேரியரில் முக்கிய பாடலாக அமைந்தது.

இதையும் படிங்க: விஜய்யை கைவிடாத பொங்கல் பண்டிகை.. அத்தனையும் வெறித்தனமான ஹிட்.. இப்படி ஒரு செண்ட்டிமென்ட்டா??

காதலுக்கு மரியாதை:

இளையராஜா இசையில் முதல் பாடல். இதுவரை குத்து பாடல் பாடி வந்த விஜய் முதல் முறையாக மெலோடி டைப் பாடல் இது தான். ஓ பேபி பேபி பாடல் விஜயின் இன்னொரு பரிணாமத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.

துள்ளி திரிந்த காலம்:

விஜய் தனக்கு பாடியதே அதிகம். மற்ற நடிகர்கள் சிலருக்கு தான் பாடல் பாடி இருக்கிறார். அதில் அருண் விஜய் படத்திற்காக பாடிய இப்பாடல் மிக பிரபலம். காரணம் இதில் விஜயுடன் உன்னிகிருஷ்ணன், சுஜாதா இருவரும் இணைந்து பாடி இருந்தனர். முதல் முதலாக புது விடுகதை எனத் துவங்கும் இப்பாடலை ஜெயந்த் என்ற இசையமைப்பாளர் இசையமைத்து இருந்தார்.

நிலாவே வா:

நிலாவே நில்லு எனத் துவங்கும் இப்பாடலை வித்யாசாகர் இசையமைத்து இருந்தார். வைரமுத்து இப்பாடலுக்கு வரிகள் எழுதி இருந்தார். இதில் விஜயின் வரிகள் வேகமாகவும், அனுராதா பாடல்கள் மெதுவாகவும் அமைக்கப்பட்டது சிறப்பாக இருக்கும். இது மட்டுமல்லாமல் ஏகப்பட்ட பாடல்களை விஜய் பாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story