விஜயிற்கு மிகவும் பிடித்த உணவு என்ன தெரியுமா? இதனால் வீட்டில் எப்போதும் இது ரெடியா இருக்குமாம்... சங்கீதா பகிர்ந்த சீக்ரெட்

by Akhilan |
விஜயிற்கு மிகவும் பிடித்த உணவு என்ன தெரியுமா? இதனால் வீட்டில் எப்போதும் இது ரெடியா இருக்குமாம்... சங்கீதா பகிர்ந்த சீக்ரெட்
X

நடிகர் விஜய் எப்போதுமே ரொம்ப அமைதியான ஆள் தான் என்பது பலருக்கும் தெரிந்த சேதி. ஆனால் அவர் வீட்டிற்குள் நிறைய சேட்டை செய்வாராம். அதிலும் அவருக்கு பிடித்த ஒரு உணவு 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டும் என்பது அவரின் அன்புக்கட்டளையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து தை பொங்கல் தினத்தில் ரிலீஸாக இருக்கும் படம் 'வாரிசு'. இப்படம் அஜித்தின் துணிவு படத்துடன் போட்டிக்கு தயாராக இருப்பதால் மொத்த கோலிவுட் திரையுலகமே எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். இரு படத்தின் சிங்கிள் பாடல்கள் தொடர்ந்து வெளியாகி மாறி மாறி ட்ரெண்ட் பட்டியலில் முதல் இடம் பிடித்து வந்தது. வாரிசு படத்தின் எல்லா வேலைகளும் முடிந்து கடைசி கட்ட பரபரப்பில் படக்குழு இயங்கி கொண்டு இருக்கிறது.

இதையும் படிங்க: “இன்னைக்கு ஒரு சோகக் காட்சி இருக்கு”… படப்பிடிப்புக்குச் செல்லும்போதே சோகமான மனிதராக மாறிய நடிகர்… டெடிகேஷன்னா இதுதான்!!

இப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்க உள்ளார். ரசிகர்களால் 'தளபதி 67' என அழைக்கப்படும் இந்த படத்தின் மீது தற்போதே எதிர்பார்ப்பு எகிற தொடங்கியுள்ளது.

இந்நிலையில், விஜய் குறித்து ஒரு சுவாரஸ்ய சம்பவம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. விஜய் எப்போதுமே ஒரு தோசை விரும்பியாம். அதனால் அவர் வீட்டில் தோசை மாவு 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டும் என்று கூறுவாராம். அதுமட்டுமல்லாமல், தோசையை தானே சுட்டு சாப்பிடுவதையே அதிகம் விரும்புவாராம். இதை அவர் மனைவி சங்கீதா ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

அசைவ விரும்பியாக இருந்தாலும் விஜய் அதிகம் சாப்பிட விரும்புவது தோசையை தான் எனவும் தெரிவித்துள்ளார். தற்போது விஜய் வாரிசு ஷூட்டிங்கினை முடித்துக்கொண்டு குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதில் பிஸியாக இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கள் கிளம்பி இருக்கிறது.

Next Story