பொன்னியின் செல்வனுக்காக விஜய் செய்த செயல்.. ஆச்சரியத்தில் படக்குழு...
தமிழ் சினிமாவின் முக்கிய படமாக அமைந்திருக்கும் பொன்னியின் செல்வன். இப்படம் பலதரப்பட்டு எதிர்பார்ப்புகளுக்கு இடையே வரும் செப்டம்பர் 30ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தில் விஜயிற்கு பிடித்த பாடல் குறித்த முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது.
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. பல வருடமாக இப்படத்தினை இயக்க பலரும் போராடினர். ஏன் மணிரத்னம் கூட 10 வருடமாக இதற்காக ஒவ்வொரு முறையும் முயன்று இருக்கிறார். முன்னர், விஜய் மற்றும் மகேஷ் பாபுவை வைத்து படமாக்க முடிவெடுத்திருந்தார். ஆனால் பின்நாட்கள் அது கைவிடப்பட்டது.
தற்போது ஜெயம்ரவி, கார்த்தி மற்றும் விக்ரம் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர். 30ந் தேதி திரைக்கு வரும், இப்படத்திற்கு தற்போது பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. இப்படத்தில் நடிகர் சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக நடித்திருக்கிறார்.
அவரும் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக கலந்துக்கொண்டிருக்கிறார். அவரிடம் விஜய் பொன்னியின் செல்வன் படம் குறித்து என்ன நினைக்கிறார் எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, பதிலளித்த சரத்குமார், அவருக்கு படம் பார்க்க ஆசை. பொன்னி நதி பாடலை தான் படப்பிடிப்பில் தொடர்ந்து பாடிக்கொண்டு இருப்பார்.
இதையும் படிங்க: எனக்காக பல நாட்கள் விஜயகாந்த் காத்திருந்தார்…அவர் மனசு யாருக்கு வரும்?…உருகும் சரத்குமார்….
மேலும், சமீபத்தில் வாரிசு படத்தின் காட்சிகள் இணையத்தில் லீக்கானது. அதுகுறித்து, அவரிடம் கேட்கப்பட்டது. ஆமாம், சில காட்சிகள் வெளியானது. யாரையும் அப்படி செய்யாதீர்கள் எனக் கேட்க தான் முடியும். பெரிய அளவில் எடுக்கப்படும் படங்களில் அதிக கவனமாக இருந்தாலும் இதன்போல தப்பு நடைபெறுவது சாதாரணமாகி விட்டது. வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் விஜய் நடித்து வருகிறார். அப்படத்தில் சரத்குமாரும் முக்கிய வேடத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.