Categories: Cinema News latest news

நண்டு சுண்டெல்லாம் விஜய்க்கு ஹீரோயின்! ‘தளபதி68’ல் மீனாட்சி சௌத்ரி உள்ளே வந்தது எப்படி?

Thalapathy 68 : விஜயின் நடிப்பில் வரும் 19 ஆம் தேதி லியோ திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. லோகேஷ் இயக்கத்தில் அனிருத் இசையில் லலித் தயாரிப்பில் படம் பிரம்மாண்டமாக தயாராகியிருக்கிறது. படத்திற்கான இரண்டு சிங்கிள்களும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் வரும் 5 ஆம் தேதி வெளியாகிறது. இந்த டிரெய்லரை ரசிகர்கள் மத்தியில் பெருமளவு கொண்டு சேர்க்க தேவையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தானதை தொடர்ந்து டிரெய்லர் மூலமாக ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சியை கொடுக்க படக்குழு  முயற்சித்து வருகிறது.

இதையும் படிங்க : ரஜினிக்காக இறங்கி வந்த அமிதாப்பச்சன்!.. கொஞ்சம் பாத்துக் கத்துக்கோங்க ஆண்டவரே!..

லியோ படத்தின் ஹைப் ஒரு புறம் இருக்க இன்னொரு பக்கம் விஜயின் 68வது படத்திற்கான அப்டேட்களும் அவ்வப்போது இணையத்தை அலங்கரித்து வருகின்றன. ஏற்கனவே படத்திற்கான பூஜைகள் நேற்று போடப்பட்டு இன்றிலிருந்து படப்பிடிப்பு துவங்கியிருக்கிறது.

முதலில் ஒரு பாடல் காட்சியைத்தான் படமாக்கிக் கொண்டிருக்கிறார்களாம். இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் தளபதி68 படத்தில் நடந்தது. விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிப்பதாக சில தகவல்கள் வெளியாகியது.

இதையும் படிங்க : 500 ரூபா மட்டும் சம்பளமாக வாங்கி விஜய் நடித்த திரைப்படம்!. இப்படியெல்லாம் நடந்திருக்கா!..

ஆனால் திடீரென நடிகை மீனாட்சி சௌத்ரி விஜய்க்கு ஜோடியாகிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு அறிவித்தது. மீனாட்சி சௌத்ரி இதற்கு முன் விஜய் ஆண்டனியின் கொலை படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் அந்தப் படம் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் ஒரு தோல்வி படத்தில் நடித்த ஹீரோயினை எப்படி விஜய்க்கு ஜோடியாக்கினார்கள் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்தது.

இதையும் படிங்க: ஐயோ காத்தடிச்சாலே மானம் போயிடுமே!. ஏடாகூடமான உடையில் ஐஸ்வர்யா லட்சுமி…

இதை பற்றி விசாரித்ததில் மீனாட்சி சௌத்ரி தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறாராம். மகேஷ் பாபுவுடனேயே நடிக்கிறார். அப்போ பெரிய அளவில் மீனாட்சி சௌத்ரி  மீது எதிர்பார்ப்பு இருக்கும் என்று கருதியே தளபதி 68 படத்தில் ஒப்பந்தம்  செய்ததாக சில தகவல்கள் வெளியானது.

Published by
Rohini