பைரவா படத்தின் தோல்வியை முன்கூட்டியே கணித்த விஜய்... என்ன செய்தார் தெரியுமா?

by Akhilan |
பைரவா படத்தின் தோல்வியை முன்கூட்டியே கணித்த விஜய்... என்ன செய்தார் தெரியுமா?
X

விஜய்

தளபதி விஜய் தான் நடிக்கும் படங்கள் கண்டிப்பாக வெற்று பெறாது. தோல்வியை தழுவி விடும் என படப்பிடிப்பின் போதே கெஸ் செய்து விடுவாராம். அதை தொடர்ந்து அப்படப்பிடிப்புகளில் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் தான் நடித்து கொடுப்பார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பைரவா

பைரவா

விஜய் தமிழ் சினிமா உலகின் முக்கிய இடத்தில் இருக்கிறார். அவரின் படம் வெளிவந்தாலே போது போட்ட பட்ஜெட்டை தட்டி தூக்கி விடலாம் என்பது கோலிவுட்டில் எழுதப்படாத விதி. இதுவே கடைசியாக அவர் நடிப்பில் வெளியான பீஸ்ட் படமும் கூறியது. மிகப்பெரிய அளவில் விமர்சனத்தை பீஸ்ட் படம் சந்தித்தாலும் வசூல் நல்ல அளவில் தான் இருந்ததாம்.

இயக்குனர்களிடம் கதை கேட்டு ஓகே சொன்ன பிறகு விஜய் அவர்களுக்கு எதுவும் இடையூறு தர மாட்டாராம். ஆனால் அவர் நடித்து வரும் படம் கண்டிப்பாக வெல்லாது என அவருக்கு தோணிவிட்டால் கடமைக்காக மட்டுமே நடித்து கொடுப்பாராம். அதில் பெரிதாக ரிஸ்க் எடுக்கவும் விரும்ப மாட்டார் எனக் கூறப்படுகிறது.

பைரவா

பைரவா

இப்படித்தான் பரதன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பைரவா படம் கண்டிப்பாக ப்ளாப் தான் என்பதை முன்கூட்டியே கணித்துவிட்டார். இதை தொடர்ந்து அப்படத்தில் பெரிதாக ரீடேக் கூட செல்லவில்லையாம். பேருந்து நிலையத்தில் நடந்த ஒரு சண்டைக்காட்சிக்கு பரதன் ரீடேக் கேட்க அதெல்லாம் தேவையில்லை. இதுவே சரியாக இருக்கிறது எனக் கூறி சென்றுவிட்டாராம். ஏன் தளபதி சார் சுறா படத்துக்கெல்லாம் தோணலயா!

Next Story