காதலுக்கு மரியாதை ஏன் மாஸ் ஹிட் படம் தெரியுமா? படத்தின் வசூல் சொன்ன ஷாக் ஆகிடுவீங்க..
விஜய் நடிப்பில் வெளியான காதலுக்கு மரியாதை படம் மிகப்பெரிய வசூல் சாதனையை பெற்றது. அது அவ்வளவு சுலபமாக நடந்து விடவில்லை. அப்படம் சந்தித்த மிகப்பெரிய சிக்கல்கள் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
விஜய் மற்றும் ஷாலினி நடிப்பில் உருவான படம் காதலுக்கு மரியாதை. 1997ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி இப்படம் திரைக்கு வந்தது. ஆனால், அப்படம் வெளியிடும் போதே படக்குழுவிற்கு மிகப்பெரிய சிக்கல் ஒன்று இருந்தது. அடுத்த இரண்டு வாரத்தில் பொங்கல் ரிலீஸ் படங்கள் வந்தால் இந்த படத்தின் வசூல் பாதிக்குமா என்பதே.
அதற்கேற்ற மாதிரி, 1998ம் ஆண்டு பொங்கல் தினத்தில் சரத்குமார் நடிப்பில் மூவேந்தர், முரளி நடிப்பில் காதலே நிம்மதி, நெப்போலியன் நடிப்பில் கிழக்கும் மேற்கும், மம்முட்டி நடிப்பில் மறுமலர்ச்சி, பிரபு தேவா நடிப்பில் நாம் இருவர் நமக்கு இருவர், பிரபு நடிப்பில் பொன்மனம், விஜயகாந்த் நடிப்பில் உளவுத்துறை, கார்த்திக் நடிப்பில் உதவிக்கு வரலாமா என தமிழ் சினிமாவின் அப்போதைய ஹிட் நாயகர்களின் படங்கள் எல்லாம் ரிலீஸாகியது.
இதையும் படிங்க: ஹிந்தியில் அட்டர் ஃபிளாப் ஆன ‘காதலுக்கு மரியாதை’….ஹீரோயின் யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…
ஆனாலும் காதலுக்கு மரியாதை படத்தின் வசூலை யாராலும் நிறுத்த முடியவில்லை. தொடர்ச்சியாக அப்படம் அரங்கம் நிறைந்த காட்சிகளாகவே இருந்து வந்தது. படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருந்தன.
ஜனவரி முடிந்து பிப்ரவரி தாண்டி மார்ச் மாதம் வரை காதலுக்கு மரியாதை வசூலில் செய்தே கொண்டே தான் இருந்தது. மார்ச் மாதம் அஜித்தின் காதலுக்கு மரியாதை படம் ரிலீஸ் ஆகியது. ஆனால் அப்படத்தாலும் காதலுக்கு மரியாதையை தொட முடியவில்லை.
ஏப்ரல் மாதம் 10ந் தேதி விஜயின் நடிப்பில் அடுத்த படமான நினைத்தேன் வந்தாய் ரிலீஸ் ஆகியது. அப்படம் தான் காதலுக்கு மரியாதை இருந்த திரையரங்குகளை பிடித்தது. இப்படி ஒரு நடிகரின் படம் ரிலீஸாகி அடுத்த படம் வரும் வரை ஓடியது எல்லாம் எம்.ஜி.ஆர் காலத்தில் மட்டுமே நடந்தது குறிப்பிடத்தக்கது.
2 கோடி வசூலில் எடுக்கப்பட்ட காதலுக்கு மரியாதை படம் அப்போதைய காலக்கட்டத்தில் சுமார் 16 கோடி ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டது. ஃபாசில் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், ஷாலினி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார் என்பது இதில் ஹைலைட்டான சேதி.