மஞ்சத்தண்ணி ஊத்தாத குறைதான்!.. அஜித்தோட நல்ல போட்டோஸ் வருது.. தளபதி நிலைமை தலைகீழா இருக்கே!..

Published on: March 21, 2024
---Advertisement---

நடிகர் விஜய்யை கோட் படத்தில் வெங்கட் பிரபு என்ன பண்ணப் போகிறாரோ என்கிற கவலை தான் அனைத்து தளபதி ரசிகர்கள் நெஞ்சிலும் தற்போது எழுந்திருக்கும் ஒரே கேள்வி. நடிகர் விஜய் கேரளாவில் கோட் படத்தின் ஷூட்டிங்கில் நடித்து வருகிறார்.

தினமும் விஜய்யை காண ஆயிரக் கணக்கில் ரசிகர்கள் திரண்டு வருகின்றனர். ரசிகர்களை தொடர்ந்து நடிகர் விஜய் தினமும் ஷூட்டிங் முடித்து விட்டு சந்தித்து வருகிறார். அவர்களுடைய அன்பை ஏற்றுக் கொள்கிறார். குழந்தையை தூக்கி கொஞ்சுகிறார். மாலையை வாங்கிப் போட்டுக் கொள்கிறார்.

இதையும் படிங்க: இவர் போய் எம்.ஜி.ஆரை வச்சி படம் எடுத்தா விளங்குமா?!.. இயக்குனர் சந்தித்த சோதனை…

ஆனால், நடிகர் விஜய்யின் புகைப்படங்கள் மற்றும் முகத்தின் தோற்றம் சிறப்பாக இல்லையே என்கிற கேள்வியும் அவர் வெளியிடும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் கிடைக்கும் புகைப்படங்கள் எல்லாம் ட்ரோல் மெட்டீரியலாக தற்போது அஜித் ரசிகர்களுக்கு கிடைத்து நிஜ ஆடாகவே விஜய் மாறிவிட்டார் என கலாய்த்து வருகின்றனர்.

அஜித் குமார் இந்த வயதிலும் செம ஸ்மார்ட்டாக இருக்கும் போட்டோக்கள் தினமும் வெளியிடப்பட்டு வரும் நிலையில், விஜய்யின் புகைப்படங்களை பார்க்கவே கவலையாக இருக்கிறதே என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். விஜய்க்கு ஏதாவது நோய் வந்து விட்டதா? கெட் வெல் சூன் விஜய் என்றெல்லாம் போட்டு அஜித் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கமல்ஹாசன் மகளை கசக்கி பிழியும் லோகேஷ் கனகராஜ்!.. ’இனிமேல்’ இப்படித்தானா பாஸ்?..

கஸ்டடி படத்தை பண்ணது போல கோட் படத்தை கெடுத்து வைத்து விட்டார் வெங்கட் பிரபு என்றால் விஜய் ரசிகர்களே திட்டி தீர்த்து விடுவார்கள்.

https://twitter.com/iNithinBarath/status/1770779657299800445

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.