அடிச்ச அடி அப்படி!.. அமெரிக்காவில் கபாலியை காலி செய்த லியோ.. உலகளவில் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

by Saranya M |   ( Updated:2023-10-19 20:53:58  )
அடிச்ச அடி அப்படி!.. அமெரிக்காவில் கபாலியை காலி செய்த லியோ.. உலகளவில் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?
X

ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் எல்லாம் என்ன இதுவரை அமெரிக்காவில் அதிக வசூல் ஈட்டிய தமிழ் படமான கபாலி படத்தின் முதல் நாள் வசூலையே விஜய்யின் லியோ திரைப்படம் வெறித்தனமாக முறியடித்துள்ளது.

கபாலி படத்தின் அமெரிக்க வசூல் மட்டுமின்றி முதன்முறையாக 100 கோடியை முதல் நாளிலேயே கடந்த விஜய் படமாகவும் லியோ மாறியுள்ளது. இந்த ஆண்டு வெளியான அத்தனை பெரிய பட்ஜெட் படங்களுக்கும் கலவையான விமர்சனங்கள் தான் குவிந்து வருகின்றன.

இதையும் படிங்க: லியோவில் லோகேஷ் பண்ண பெரிய தப்பே இதுதான்!.. அந்த ரோலக்ஸை மட்டும் இறக்கியிருந்தா?.

வாரிசு, துணிவு, பொன்னியின் செல்வன் 2, ஜெயிலர் மற்றும் தற்போது லியோ என ஒரு பக்கம் படத்தை ஒரு சாரார் கொண்டாடினாலும், ட்ரோல் செய்ய ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.

ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாகி உள்ள லியோ திரைப்படத்தில் தனது எல்சியூவையும் உள்ளே நுழைத்து விளையாடி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். படத்திற்கு இருந்த அதிக ஹைப் மற்றும் கடைசி வரை இருந்த பிரச்சனை காரணமாக இன்னும் ஒரு வாரத்துக்கு பல இடங்களில் டிக்கெட்டுகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதையும் படிங்க: ரஜினிகாந்தோட அந்த மெகா ஹிட் பாட்டு!.. லியோவில் வச்சு மாஸ் பண்ண லோகி.. விஜய் ரசிகர்கள் அப்செட்?..

அமெரிக்காவில் கபாலி திரைப்படம் அதிகபட்சமாக 1.92 மில்லியன் டாலர் வசூல் செய்திருந்த நிலையில், விஜய்யின் லியோ திரைப்படம் 2 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 32 கோடி ரூபாய் முதல் நாள் வசூலை ஈட்டி இந்த ஆண்டு வெளியான ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூலை லியோ முறியடித்துள்ளதாகவும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என வசூல் மழை லியோவுக்கு தென்னிந்தியாவில் அதிகம் குவிந்த நிலையில், முதல் நாள் மட்டும் உலகளவில் 145 கோடி ரூபாய் வசூலை லியோ ஈட்டியுள்ளதாக கூறுகின்றனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிடுமா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை என்பதால், 500 கோடி வசூலை முதல் வாரத்திலேயே லியோ வசூல் செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story