More
Categories: Cinema News latest news

அட்லீக்கும் ஷாருக்கானுக்கும் முதல் ஆப்பு ரெடி!.. லியோ டிக்கெட் புக்கிங் எப்போ ஆரம்பம் தெரியுமா?..

ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் 525 கோடிக்கும் அதிகமான வசூல் ஈட்டிய நிலையில், எப்படியாவது இந்த ரேஸில் ஜெயித்து விட வேண்டும் என நடிகர் விஜய் தரப்பு தீவிரமாக திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது ஓவர்சீஸ் ஒன்றே வழி என இப்போதே ஓவர்சீஸ் உரிமையை கைப்பற்றியுள்ள அஹிம்சா நிறுவனம் ஏற்பாடுகளை ஆரம்பித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பையே வெளியிட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கெளதம் மேனன், மிஷ்கின், அனுராக் காஷ்யப், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாகப் போவதில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளனர்.

Advertising
Advertising

இதையும் படிங்க: என்ன பெரிய நோலன் படம்!.. மாதவன் படம் பார்த்துருக்கீங்களா?.. ஹாலிவுட்டை அலற விட்ட ஏ.ஆர். ரஹ்மான்!..

யாரு வந்தாலும் அடி கன்ஃபார்ம்:

விஜய்யின் லியோ படத்துக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும் விதமாக தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 6 பெரிய படங்கள் போட்டி போடப் போகின்றன.

இதன் காரணமாக லியோ படத்தின் வசூல் அதிகளவில் அடிபடும் என்றும் ஜெயிலர் வசூலை முந்துவது எல்லாம் பகல் கனவு என கூறப்பட்டு வந்த நிலையில், தயாரிப்பு நிறுவனம் மற்றும் விநியோகஸ்தர்கள் லியோ படத்தின் வசூலை அதிகரிக்க என்ன என்ன திட்டங்களை செயல்படுத்தலாம் என்கிற முடிவில் உறுதியாக உள்ளதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: பைக் டூர் மட்டுமில்லை!.. நான் சைக்கிள் டூரும் போவேன்!.. க்யூட்டா சைக்கிள் ஓட்டிய அஜித் குமார்!..

செப்டம்பர் 7ம் தேதியே டிக்கெட் புக்கிங்:

அதன் முதற்படியாக ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் வெளியாகும் செப்டம்பர் 7ம் தேதியே இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் லியோ படத்தின் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கும் என அஹிம்சா என்டர்டெயின்மென்ட் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதாவது, லியோ படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே சுமார் 6 வாரங்களுக்கு முன்னதாக டிக்கெட் முன் பதிவு தொடங்கப்படும் நிலையில், சிவராஜ்குமாரின் கோஸ்ட், பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி உள்ளிட்ட படங்களை விட அதிகளவில் லியோ ஓவர்சீஸ் வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிக்கெட் முன்பதிவுக்கு அதிக கிராக்கி இருக்கும் பட்சத்தில் ஓவர்சீஸில் தியேட்டர் எண்ணிக்கைகளும் முதல் நாளிலேயே அதிகரித்து ஓவர்சீஸ் வசூல் மிகப்பெரியளவில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை வசூல் போட்டியில் பின் வாங்கப் போவதே இல்லை என விஜய் முடிவு செய்துள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. ஆனால், சிக்கலே அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்துக்கு இருக்கும் எனக் கூறுகின்றனர்.

Published by
Saranya M

Recent Posts

  • Bigg Boss Tamil 8
  • Biggboss
  • BiggBoss Tamil
  • Biggboss Tamil 7
  • Cinema News
  • Featured
  • Flashback
  • latest news
  • OTT
  • Review

உங்க டெடிகேஷனுக்கு அளவு இல்லையா ஐஸ்வர்யாஜி? ஒரு நிமிஷம் ஷாக் ஆயிட்டோம்

தமிழ் தெலுங்கு…

16 minutes ago