இது என்னடா கூத்தா இருக்கு!.. லியோ தெலுங்கு படம்.. மாஸ்டர் மலையாள படமா?.. அட்லீக்கே அண்ணனா லோகி?..

Published on: February 19, 2024
---Advertisement---

தமிழ் சினிமாவில் இருந்து அப்பட்டமாக பல படங்களில் இருந்து காட்சிகளை உருவி புதிய பெயிண்ட் அடித்து இயக்குனர் அட்லி படங்களை இயக்கி வந்த நிலையில் அவரை காப்பி கேட் என்று பலரும் விமர்சிக்க ஆரம்பித்தனர்.

ஆனால், லோகேஷ் கனகராஜ் திறமையான இயக்குனர் என கொண்டாடி வந்த ரசிகர்கள் தற்போது அவர் எங்கிருந்தெல்லாம் படங்களை சுட்டு எடுத்துள்ளார் என்பதை வெளிச்சம் போட்டு காட்டி இவர் அட்லீக்கு அண்ணன் என கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் அப்படி கேட்பார்னு எதிர்பார்க்கவே இல்ல!.. அழுதே விட்டேன்.. உருகும் சிவக்குமார்….

விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகன், ஆண்ட்ரியா, சாந்தனு, கெளரி கிஷன் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான மாஸ்டர் திரைப்படம் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நம்மவர் படத்தின் இன்ஸ்பிரேஷன் எனக் கூறப்பட்டது. ஆனால், மலையாள ரசிகர்கள் அதெல்லாம் கிடையாது மம்மூட்டி படத்திலிருந்து சீன் பை சீன் சுட்டு எடுத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ் என காட்சிகளின் ஆதாரத்துடன் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.

லோகித் தாஸ் எழுதி சிபி மலையாளி இயக்கிய முத்ரா எனும் மலையாள திரைப்படம் கடந்த 1989 ஆம் ஆண்டு வெளியானது. அந்த படத்தில் சிறையில் இருக்கும் கைதிகளை திருத்தும் அதிகாரியாக மம்மூட்டி நடித்துள்ளார். அந்தப் படத்தை சீன் பை சீன் அப்படியே காப்பி அடித்து விஜய்க்கு தகுந்த வாறு கில்லி கபடி சீன் எல்லாம் உள்ளே சொருகி இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் உருவாக்கி உள்ளார் என தெலுங்கு ரசிகர்களை தொடர்ந்து மலையாள ரசிகர்களும் கோலிவுட்டை காலி செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: லியோ படத்தில் இருந்த அந்தவொரு கேரக்டர் கோட் படத்திலேயும் இருக்காம்!.. யாரு நடிக்கிறா தெரியுமா?

முன்னதாக ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் எனும் ஹாலிவுட் படத்தை தழுவி தான் லியோ உருவாக்கப்பட்டது என கிரெடிட்ஸ் கொடுத்திருந்தார் லோகேஷ் கனகராஜ். ஆனால், அதுவும் ஜகபதி பாபு நடித்த காய்ம் 2 படத்தை சுட்டு விட்டு அந்த படம் சுடப்பட்ட ஹாலிவுட் படத்தை குறிப்பிட்டு விட்டார் என்று டோலிவுட் ரசிகர்களும் தர்ம அடி கொடுத்து வருகின்றனர்.

https://twitter.com/Arp_2255/status/1759239895271227856

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.