விஜயிற்கு வில்லனாகும் மலையாள காதல் மன்னன்... சர்ப்ரைஸ் தகவல்...

by Akhilan |
விஜய்
X

விஜய்

தமிழ் சினிமாவில் விஜயின் அதீக்கம் தான் தற்போது இருக்கிறது. அவருக்கு வில்லனாக நடிக்க முன்னணி நடிகர்களே விரும்பும் நிலைக்கூட உருவாகி இருக்கிறது. அதன்படி மலையாளத்தில் காதல் படங்களில் அதிகம் நடித்து காதல் மன்னன் என ரசிகர்கள் செல்லமாக அழைக்கும் ஒரு முக்கிய பிரபலத்தை வில்லனாக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.

கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். ஆரம்பகாலத்தில் காதல் திரைப்படங்களில் அதிகம் நடித்து வந்த விஜய். சமீபகாலமாக ஆக்‌ஷன் திரைப்படங்களையே அதிகமாக விரும்பி நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படம் விஜயிற்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. ஆனால் சமீபத்தில் வெளியான பீஸ்ட் படம் பெரும் சர்ச்சையில் சிக்கியது.

விஜய்

விஜய்

இதனால் அவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் வாரிசு படத்தினை ஹிட் படமாக்க மாற்ற அந்த படக்குழு பெரும் போராட்டத்தில் இருக்கிறார்களாம். வம்சி பைடிப்பள்ளி இயக்கும் இந்த படத்தினை தில் ராஜு தயாரித்து இருக்கிறார். இந்த படத்தில் ராஷ்மிகா, குஷ்பூ, ஷாம், சரத்குமார் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

காதல் மன்னன்

இந்தப் படத்தில், அர்ஜுன், சஞ்சய் தத் ,பிரகாஷ்ராஜ், பிருத்விராஜ் என மாஸ் வில்லன்கள் இருப்பதாக தகவல்கள் இருக்கிறது. ஆனால் கால்ஷூட் பிரச்சனை காரணமாக பிருத்விராஜ் இந்த படத்தில் இருந்து விலகி விட்டாராம். அவருக்கு பதில் ப்ரேமம் படத்தில் காதல் மன்னனாக கலக்கிய நிவின் பாலியினை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது.

Next Story