நினைத்தேன் வந்தாய் படத்தில் நடித்தது ரம்பாவே இல்லையாம்... ரகசியத்தை உடைத்த இயக்குனர்...

by Akhilan |   ( Updated:2022-09-28 06:19:15  )
நினைத்தேன் வந்தாய் படத்தில் நடித்தது ரம்பாவே இல்லையாம்... ரகசியத்தை உடைத்த இயக்குனர்...
X

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக இருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே தற்போது இருக்கிறார்கள். இவருக்கு நினைத்தேன் வந்தாய், வசீகரா மற்றும் பிரியமானவளே என மூன்று ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் செல்வபாரதி. இவர் தனது முதல் படமான நினைத்தேன் வந்தாய் குறித்து பல முக்கிய தகவல்களை தெரிவித்து இருக்கிறார்.

அந்நிகழ்ச்சியில் பேசிய செல்வபாரதி, தான் முதலில் சுந்தர் உடன் பணிபுரிந்து வந்தேன். அப்போது, வெளியில் வாய்ப்புகள் தேடி வந்தேன். அப்போது எனக்கு கிடைத்த படம் தான் விஐபி. அங்கு பணிபுரிந்து கொண்டு இருந்தேன். விஸ்வநாதன் என்ற மேனேஜர் என்னை பார்க்க வந்தார். அவர், இயக்குனர் நாகேந்தர் என்னை பார்க்க வரக்கூறினார்.

நான் பார்க்க சென்றேன். அங்கு இயக்குனர், அல்லு அரவிந்த் என அனைவரும் இருந்தனர். உள்ளத்தை அள்ளித்தா ரைட்டர் நீங்க தானே எனக் கேட்டார். ஆமா சார் நான் தான் எனக்கூறினேன். பெல்லி சந்தடி என ஒரு தெலுங்கு படம் இயக்கி இருக்கிறேன். அதை நீங்கள் தமிழில் ரீமேக் செய்ய வேண்டும் எனக் கூறினார்கள். நானும் உடனே ஓகே கூறிவிட்டேன்.

தொடர்ந்து, எனக்கு அப்போது கார்த்தி தான் எனக்கு நல்ல அறிமுகம். அவரிடம் இந்த கதையை கூறினேன். ஆனால் கார்த்தியின் சம்பளம் அதிகமாக இருந்ததால் தயாரிப்பாளர் ஒப்புக்கொள்ளவில்லை. அப்போது எனது மனேஜருடன் சாலிகிராமம் வழியாக சென்றுக்கொண்டிருந்தேன். அவர் என்னிடம் இது தான் விஜய் மற்றும் எஸ்.ஏ.சி இல்லம் எனக் கூறினார்.

நான் ஒருமுறை ட்ரை செய்து பார்க்கலாம் என்ற நம்பிக்கையில் உள்ளே சென்றேன். அப்போது, எஸ்.ஏ.சி சார் உள்ளே இருந்தார். அவரிடம் நான் இயக்கப்போகும் படம் குறித்து கூறினேன். அவரும் சூப்பர் படம். யார் தயாரிக்கிறார் எனக் கேட்டார். அல்லு அரவிந்த் எனக்கூறினேன். அட சூப்பர்பா. படத்தை பார்க்க ஏற்பாடு செய்யக்கூறினார். நானும் அவர்களுக்கு படத்தை போட்டு காட்டினேன். அதை, எஸ்.ஏ.சி, ஷோபனா மற்றும் விஜய் என மூவரும் பார்த்தனர். படம் மூவருக்குமே பிடித்துப்போக, உடனே கால்சீட் கிடைத்தது.

நினைத்தேன் வந்தாய்

அப்போது ஒரு போட்டோஷூட்டிற்காக விஜயிடம் சென்று தம்பி ஷாட் ரெடி எனக் கூறினேன். அதுவரை அவரை எல்லாருமே சார் என்றே அழைத்து வந்தனர். நான் தம்பி என்றதும் என்னுடம் ஒட்டிக்கொண்டார். அதன் பிறகே, என்னங்கணா என ஸ்லாங்கையும் மாற்றினார்.

இதையும் படிங்க: விஜய்யை வைத்து மூன்று படம் – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா அந்த இயக்குனர்!

உடனே நினைத்தேன் வந்தாய் படப்பிடிப்பும் துவங்கியது. அப்போது விஜயின் ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் வண்ண நிலவே வரிக்கு ஒரு காட்சி படமாக்கி கொண்டேன். விஜயே என்னங்கணா இப்படி எனக் கூறினார். அவரிடம் இது எடிட்டிங் முடித்து வரும்போது பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும் எனக் கூறினேன். கடைசி மூன்று காட்சிகள் மட்டும் ரம்பாவுடைய நடிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் அப்போது சீரஞ்சிவி படத்தில் நடிக்கணும் என சொல்லிவிட்டு சென்றார். அதில் எனக்கு பெரிய கோபம். உடனே தேவயாணியிடம் இதைக்கூறி ரம்பா வரவில்லை. நீங்க எப்படி எனக் கேட்டேன். எனக்கு பிரச்சனை இல்லை. நடிப்பேன் என தேவயாணி கூறிவிட்டார். இதில் டூப் போட்டு அதை முடித்தேன்.

தொடர்ந்த், வண்ண நிலவே பாடலில் முழுக்கவே ரம்பாவிற்கு பதில் அவர் உடல் அமைப்பை கொண்ட டூப் தான் போடப்பட்டது. மொத்தம் 47 ஷாட்கள் வேறு ஒருவர் தான் ரம்பாவிற்கு பதில் நடித்தார். அதுகுறித்து, என்னிடைய முடிவில் உறுதியாக இருந்தேன். ஆனால் அந்த பாடல் பின்னால் பெரிய வெற்றியை பெற்றது எனக் கூறினார்.

Next Story