இந்த மூஞ்சிலாம் வியாபாரம் ஆகாது... ஒதுக்கப்பட்ட நடிகர்... இப்போ சூப்பர்ஸ்டார்...
கோலிவுட்டில் சில நேரங்களில் நாம் நினைக்க முடியாத அளவு ஆச்சரியங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படி ஒரு நடிகர் தேறவே மாட்டார் என கூறப்பட்டது. இருந்தும் விடாப்பிடியாக நின்று நடித்து கொண்டிருந்தவர் தனது வெற்றி அந்தஸ்த்தையும் பிடித்து விட்டார்.
வாரிசு நடிகர் தானே இவரால் ஈசியாக சினிமாவிற்குள் வந்து விடலாம் என்பது பலரின் நம்பிக்கை. ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு தான் கிடைக்கும். ரசிகர்களிடம் இடம் பிடிப்பது என்பது குதிரை கொம்பு தான். மேலும், அவர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். இப்படி சினிமாவிற்குள் வந்து பல சோதனைகளை சந்தித்து இன்று தளபதி அந்தஸ்த்தை பிடித்து இருப்பவர் தான் விஜய். இவரின் தொடக்க காலம் என்னவோ சோதனை தான்.
முதன்முதலில் ரஜினிகாந்தின் அண்ணாமலை பட டயலாக்கை தனது தந்தையிடம் சொல்லிக்காட்டினாராம். தொடர்ந்து தனக்கு நடிக்க வேண்டும் என்பதையும் கூறினாராம். இதில் ஆச்சரியம் என்னவென்றால், அந்த நேரத்தில் இனி சினிமா வேண்டாம் சம்பாத்தித்ததே போதும் என ஒதுங்கி இருந்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். இருந்தும் ஒரே மகன் ஆசையை நிறைவேற்ற எண்ணி இருக்கிறார். பலரிடம் வாய்ப்பு கேட்டும் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. உடனே தனது மகனுக்காக இவரே களத்தில் இறங்கி இருக்கிறார்.
நாளைய தீர்ப்பு படத்தில் விஜய் அறிமுகமாகிறார். ஆனால் அவரை பார்த்த பலரும் இவரெல்லாம் சினிமாவிற்கு செட்டே ஆகமாட்டார் என்றார்களாம். விஜய் சற்றும் அசரவில்லை அவர் தந்தையும் தான். தொடர்ச்சியாக படங்களை எடுத்து வெளியிட்டனர். விஜயகாந்தும் தனது வெற்றி இயக்குனர் மகனுக்காக செந்தூரப்பாண்டி படத்தில் நடித்துக் கொடுத்தார். இருந்தும் விஜய் வளர்ச்சி ஒரே இடத்தில் தான் இருந்தது.
கேமரா, கூட ஒரு நடிகை இருந்தால் போதும் இவர்கள் எல்லாம் படம் எடுக்கிறார்கள் என ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அது அனைத்துக்குமே விஜய் பொறுமையை மட்டுமே கடைப்பிடித்தார். இத்தனை போராட்டத்திற்கு பின்னர் விஜய் பூவே உனக்காக படத்தின் மூலம் முதல் வெற்றியை பதிவு செய்தார்.
இதையும் படிங்க: இது சரிபட்டு வராது.! விஜயை காப்பாத்த அவரால் மட்டும் தான் முடியும்.! SAC எடுத்த அதிரடி முடிவு.!
யாரை திரையுலகம் வியாபாரம் ஆகமாட்டார் எனக் கூறினார்களோ, இன்று அவரின் மார்க்கெட் வேறு அளவு உயர்ந்து விட்டது. கோலிவுட்டின் டாப் சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்து இருக்கிறார். இயக்குனர் மகன் தானே விஜய் என்றாலும் அவரின் உழைப்பும் இன்று அவருக்கு பெரிய இடத்தினை கொடுத்திருக்கிறது.