வாரிசு படக்குழுவினரை தொடர்ந்து சீண்டும் நெட்டின்சன்கள்... இப்படியே போனா தியேட்டருக்கு யாரு வருவா?

by Akhilan |
வாரிசு
X

varisu

விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தின் காட்சிகள் தொடர்ந்து லீக்கானது. தற்போது கிளைமேக்ஸ் காட்சியே லீக்காகி இருப்பது படக்குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

பீஸ்ட் படத்தில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டதால் வாரிசு படத்தினை எப்படியாவது பெஸ்டாக கொடுத்து விட வேண்டும் என்பது விஜய் தரப்பு கோரிக்கையாக இருக்கிறது. இதனால் இயக்குனர் வம்சியிடம் படத்தில் எந்தவிதமான காட்சியிலும் லாஜிக் இடிக்காமல் பார்த்து கொள்ள சொல்லி இருக்கிறார். விறுவிறுப்பாக படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நெருங்கி கொண்டிருக்கிறது.

வாரிசு

varisu

சில தினங்கள் முன்னர் வாரிசு படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் லீக்கானது. இதனால் கடுப்பான விஜய் செட்டில் தொழில்நுட்ப கலைஞர்கள் யாரும் இருக்க கூடாது என கறார் காட்டி வருகின்றாராம். ஆனால் மீண்டும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, கிளைமேக்ஸ் படப்பிடிப்பு காட்சியே இணையத்தில் லீக்காகி இருக்கிறது. கோட் சூட் போட்டுக்கொண்டு விஜய் நடந்து வருவதும், ஹெலிகாப்டர் இருப்பதும் அந்த வீடியோவில் இடம் பெற்று இருக்கிறது.

வாரிசு

வாரிசு

இது தொடர்கதையாக நடந்து வருவதால் விஜய் செம அப்செட் மோடில் இருக்கிறாராம். படக்குழுவினரிடம் இதுகுறித்து விசாரிக்கவும் அறிவுரை கொடுத்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது. இது படத்தின் வெற்றியை பாதிக்கலாம் என்பதால் எல்லாரையுமே விசாரித்து இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க படக்குழு தீவிரமாக இறங்கி இருக்கின்றனர்.

Next Story