வாரிசு முதல் சிங்கிளை விஜய் பாடினார்... இரண்டாவது சிங்கிள் இந்த டாப் ஸ்டார் பாடியிருக்கிறாராம்...
விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தின் இரண்டாவது பாடலை பாடி இருக்கும் முன்னணி கோலிவுட் நட்சத்திரம் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார் நாயகனாக இருப்பவர் விஜய். இவரின் ஒரு படம் கிடைத்து விட்டால் போதும் லைப் செட்டில் என்ற நிலைமைக்கு தயாரிப்பாளர்களே வந்துவிட்டனர். அந்த வகையில் அவரின் மார்க்கெட் மாஸ் வளர்ச்சியில் இருக்கிறது.
தற்போது விஜயின் வாரிசு படத்தின் வேலைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது. வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது. இப்படத்தினை டில் ராஜு தயாரித்து வருகிறார்.
விஜய், ராஷ்மிகா மந்தனா, ஷாம், பிரபு, சங்கீதா, ஜெயசுதா, யோகி பாபு, ஆர்.சரத்குமார் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். 118 கோடி சம்பளமாக விஜயிற்கு வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
திரைக்கதை மற்றும் வசனங்களை விவேக் எழுதி வருகிறார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 1990களில் வெளிவந்த விஜய்யின் பெரும்பாலான படங்களைப் போலவே இந்தப் படமும் குடும்பத்தை சுற்றியே உருவாக்கப்பட்டு இருப்பதாக தில் ராஜு ஒரு பேட்டியி தெரிவித்து இருந்தார்.
இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். முதல் சிங்கிள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. ரஞ்சிதமே என தொடங்கும் அப்பாடலை விஜய் மற்றும் மானசி இணைந்து பாடினர். அடுத்த சிங்கிளை நடிகர் சிலம்பரசன் பாட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் ரசிகர்களும், சிம்பு ரசிகர்களும் அந்த பாடலுக்காக இப்போதே ஆர்வமாக காத்திருக்க தொடங்கி இருக்கிறார்கள்.