வாய்ல சனி!..கிடைச்ச பெரிய வாய்ப்பை தவறவிட்ட வடிவேலு!.. இப்படியுமா ஒரு கண்டீசன்?..
தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னனாக வலம் வந்தவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் நடிகர் வடிவேலு. வைகைப்புயல் என அனைவராலும் அழைக்கப்படுபவர். கவுண்டமணி, செந்தில் இருக்கும் போது அவர்களுடன் ஒரு துணை நடிகராகத் தான் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.
நடிகர் ராஜ்கிரண் என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் வடிவேலுவை முதன் முதலில் அறிமுகப்படுத்தினார். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கிடைத்த ரோலில் தனது நகைச்சுவை மிக்க பேச்சால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
இப்படியே தமிழ் சினிமாவில் காமெடியில் மிகப்பெரிய ஆளுமையாக வலம் வந்தார் வடிவேலு. நன்றாக போய்க் கொண்டிருந்த வடிவேலுவின் கெரியர் திடீரென அரசியல், விஜயகாந்த் பற்றி அவதூறு பேச்சு ஆகியவற்றால் சினிமாவை விட்டு கொஞ்ச நாள்கள் ஒதுங்க நேர்ந்தது.
அதன் பின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தின் மூலம் ஒரு கம்பேக் கொடுத்தார். ஆனால் அந்தப் படம் நன்றாக ஓடவில்லை. மேலும் வடிவேலுவுடன் சக துணை நடிகர்கள் பலரும் நடிப்பார்கள். வடிவேலுவின் குரூப் என்றே இவர்களை சொல்வார்கள். போக போக அவர்களை வடிவேலு கண்டுகொள்ளவில்லை என்றும் தங்களை மிகவும் கேவலமாக பேசுகிறார் என்றும் சமீபகாலமாக வடிவேலுவை பற்றி செய்திகள் வைரலாகி வருகின்றது.
இந்த நிலையில் இயக்குனர் ஆறுமுககுமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் ஒரு படம் தயாராக போவதாக நீண்ட நாள்களாக ஒரு பேச்சு கோடம்பாக்கத்தில் இருந்து வந்தது. இதனிடையில் விஜய்சேதுபதியின் மார்கெட்டில் சரிவு ஏற்பட அந்த படத்தின் நிலைமையும் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.
இதையும் படிங்க : லோகேஷ் கனகராஜ் இப்ப பண்ணுனதை நான் அப்பவே பண்ணுனேன்! – சத்யராஜ் சொன்ன அதிர்ச்சி தகவல்!..
இந்த நிலையில் பெருமாள் வாத்தியராக விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் விடுதலை படத்தில் பெருமளவு பேசப்பட்டு வருவதால் ஆறுமுககுமார் மீண்டும் அவரின் ப்ராஜக்ட்டை கையில் எடுத்திருக்கிறார். வருகிற மே மாதம் படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடக்க இருக்கிறதாம்.
இந்தப் படத்தில் ஏற்கெனவே விஜய்சேதுபதியுடன் வடிவேலு கூட்டணி என்று பேசி கொண்டிருந்த நிலையில் வடிவேலு எப்பவும் போல அவர் வேலையை காட்டியிருக்கிறார். அதாவது பல கண்டீசன்களை போட்டிருக்கிறாராம்.
அதுவும் வெளிநாடு படப்பிடிப்புனாலே வடிவேலு விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமாம். ஏனெனில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படப்பிடிப்பு சமயத்திலும் வெளி நாட்டு சூட்டிங்கில் ஒரு ஹோட்டலில் வடிவேலுவுக்காக ரூம் ஒதுக்கப்பட அவர் ஹோட்டலில் இருக்கிற எல்லா அறைகளையும் திறந்து காட்டுங்கள், எனக்கு எது எது பிடிக்கிறதோ அதில் தான் தங்குவேன் என்று சொன்னவராம். அதனாலேயே வடிவேலுவை விஜய் சேதுபதி படத்தில் இருந்து தூக்கிவிட அவருக்கு பதிலாக யோகிபாபு நடிக்க போகிறாராம்.