Chiyan vikram: நாடகங்களில் இருந்து சினிமா வந்ததாலோ என்னவோ 50,60களில் பக்கம் பக்கமாக ஹீரோக்களும், மற்ற கதாபாத்திரங்களும் வசனம் பேசி நடித்தார்கள். நடிகர் திலகம் சிவாஜி, எம்.ஜி.ஆர் போன்ற நடிகர்கள் மக்களிடம் பிரபலமானதே அவர்கள் பேசிய வசனங்கள் மூலதான். பராசக்தி படத்தில் சிவாஜி பேசிய வசனத்தை யாராலும் மறக்க முடியாது.
ஆனால், மகேந்திரன், பாலுமகேந்திரா, மணிரத்னம் போன்ற இயக்குனர்கள் தங்கள் படங்களில் வசனங்களை குறைத்துவிட்டு காட்சிகள் மூலம் கதைகளை கூறினார்கள். கமல்ஹாசன் பேசும் படத்தில் படம் முழுக்க பேசாமலே நடித்து அசத்தி, ஆச்சர்யப்படுத்தினார். அதன்பின் தமிழ் சினிமாவில் சேது படம் மூலம் முரட்டு இயக்குனராக வந்தவர் பாலா.
இதையும் படிங்க: 20 வருஷத்துக்கு முன்னாடி சிக்குனது சியான்!.. இப்ப நீதான்!.. அருண் விஜயை வச்சும் செய்யும் பாலா!..
சேது படத்தில் விக்ரமை வித்தியாசமான வேடத்தில் நடிக்க வைத்தார். இப்படத்தின் இறுதிக்காட்சியில் விக்ரமுக்கு வசனமே இருக்காது. ஆனால், அசத்தலாக நடித்து மனதை பாதிக்க வைத்திருப்பார். அதேபோல், அதே பாலா இயக்கிய பிதாமகன் படத்தில் விக்ரம் ஏற்ற சித்தன் வேடம் இதுவரை எந்த நடிகரும் செய்யாதது.
படம் முழுவதும் பேசாமலே உறுமிக்கொண்டு மட்டுமே நடத்திருப்பார். இந்த படம் வெளியாகி 20 வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது ப.ரஞ்சித்தின் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விக்ரம். இந்த படத்தில் இவரின் கெட்டப்பை பார்த்தாலே கண்டிப்பாக விருது வாங்குவார் என கணிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: விபத்தில் சிக்கி 23 அறுவை சிகிச்சைகள்!.. 3 வருடம் படுக்கை!.. சாதித்து காட்டிய சியான் விக்ரம்!..
இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வீடியோ அனைத்தும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதோடு, எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த படத்திலும் விக்ரமுக்கு அதிக வசனங்கள் கிடையாதாம். இப்படத்தின் தனது காட்சிகளுக்கான டப்பிங்கை ஒரு மணி நேரத்தில் விக்ரம் பேசி முடித்துவிட்டாராம்.
இந்த படத்தில் நான் பட்ட கஷ்டத்தோடு ஒப்பிட்டால் பிதாமகன், ஐ படங்கள் பட்ட கஷ்டங்கள் 3 சதவீதம் கூட இல்லை என பேசியிருந்தார் விக்ரம். எப்படியோ, பிதாமகனுக்கு பின் அதிகம் பேசாத வேடத்தில் நடித்திருக்கிறார் விக்ரம். இந்த படம் ரசிகர்களை கவருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: எங்களுக்கு கோமணம்… அவருக்கு மட்டும் ஷாட்ர்ட்ஸா?… இயக்குனரை வெளுத்து வாங்கிய விக்ரம்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…