More
Categories: Cinema News latest news

இப்படி ஒரு பகை இருந்தும் உதவி செஞ்சிருக்காரே? ‘பிதாமகன்’ தயாரிப்பாளரை தக்க நேரத்தில் காப்பாற்றிய விக்ரம்

சில மாதங்கள் முன்பு பிதாமகன் தயாரிப்பாளர் வி.ஏ.துரை சர்க்கர நோயால் அவதிப்பட்டும் அவருக்கு உதவ யாரும் முன்வரவில்லை என்றும் செய்திகள் பல ஊடகங்களில் காட்டுத்தீ போல பரவியது. குறிப்பாக பிதாமகன் படத்தில் நடித்த விக்ரம் கூட உதவ முன்வரவில்லை என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.

துரையும் பல சேனல்களில் அவருடைய நிலையை பற்றி விளக்கமாக பேசியிருந்தார். உதவிகளும் கேட்டார். அதில் ரஜினிதான் முதல் ஆளாக அவருக்கு தேவையான உதவிகளை செய்தார். இந்த நிலையில் அவருக்கு சர்க்கர நோய் முற்றி அவருடைய ஒரு காலையே எடுத்து விட்டார்களாம்.

Advertising
Advertising

இதையும் படிங்க : மம்முட்டி, மோகன்லாலுக்கு கிடைக்காத வாய்ப்பு.. தட்டி தூக்கிய தலைவாசல் விஜய்..

அதற்கு பதிலாக செயற்கை கால்தான் பொருத்த வேண்டும் என்று சொல்ல அதற்கு பல லட்சங்கள் ஆகும் என தெரியவந்தது. இதை அறிந்த விக்ரம் நேராக அந்த செயற்கை கால் பொருத்தும் நிறுவனத்திற்கே அதற்காக ஆகும் செலவை ரூபாய் 2.50 லட்சத்தை செலுத்தி விட்டாராம்.

அது போக துரைக்கு கை செலவுக்காக ஒரு லட்சமும் கொடுத்திருக்கிறாராம். இதில் கூடுதல் செய்தி என்னவென்றால் பிதாமகன் படத்திற்கு பிறகு துரையும் விக்ரமும் சந்தித்துக் கொள்ளவே இல்லை என்பதுதான். ஏனெனில் சம்பளப் பிரச்சினை காரணமாக விக்ரமுக்கும் துரைக்கும் அந்த நேரத்தில் சண்டை வந்திருக்கிறதாம்.

இதையும் படிங்க : ஒரு தடவ சொன்ன பத்தாதா? மேடை போட்டு வேற சொல்லனுமா? எதிர்பார்ப்பை சுக்கு நூறாக உடைத்த விஜய்

மேலும் விக்ரம் பாலாவுக்கு இடையே பிரச்சினை வர விக்ரமுக்கு பதிலாக முரளியை போட பாலா எண்ணியிருக்கிறார். அதற்கு ஆதரவாக துரையும் நின்றிருக்கிறார். எப்படியோ பிரச்சினைகளை தாண்டி விக்ரம் அந்த படத்தில் நடித்துக் கொடுத்தாராம். அந்த சமயம் நின்னு போற உறவாம். இப்போதுதான் துரையின் நிலைமையை அறிந்து பகையை மறந்து ஓடி வந்து உதவியிருக்கிறார் விக்ரம்.

மனிதம் என்பது எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வரும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.

Published by
Rohini