Connect with us
vijay

Cinema News

ஒரு தடவ சொன்ன பத்தாதா? மேடை போட்டு வேற சொல்லனுமா? எதிர்பார்ப்பை சுக்கு நூறாக உடைத்த விஜய்

சமீபகாலமாக விஜய் – ரஜினி என்ற பேச்சுதான் கோடம்பாக்கம் முழுவதும் பரவிக் கொண்டு வருகிறது. விஜய் – அஜித் என்பது போய் யாரும் எதிர்பார்க்காத ஒரு போட்டி சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறது. இது ரசிகர்களுக்கு ஒரு பக்கம் கொண்டாட்டமாக இருந்தாலும் இதை கவனித்துக் கொண்டிருக்கும் மூத்த நடிகர்கள், பிரபலங்கள் மத்தியில் பெரும் வேதனையை கிளப்பியிருக்கிறது.

ரஜினி இந்த மாதிரி செய்வாரா? இல்ல விஜய்தான் அப்படி நினைப்பாரா? என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஆனால் இதற்கு மத்தியில் இந்த ஒரு பரபரப்பை அடக்க வேண்டும் என்றால் அது விஜயால் மட்டுமே முடியும் என்றும் சொல்கின்றனர்.

எந்த மேடையில் இந்த சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சை கிளம்பியதோ அதே மேடையில் இதற்கான முற்றுப்புள்ளியை விஜய் கண்டிப்பாக வைக்க வேண்டும் என பல தரப்பிலிருந்து கூறப்படுகிறது. அதற்கான சரியான மேடை அவர் நடித்த லியோ படத்தின் இசை வெளியீட்டு வி்ழா மேடைதான் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க : அவரு ரஜினி வெறியனாச்சே! தலைவர் 170ல் முதல் ஆளாக துண்ட போட்ட நடிகர் – ஆனால் ஒரு கண்டீசன்

லியோ ஆடியோ வெளியீட்டு விழாவின் போது விஜய் இதை பற்றி கண்டிப்பாக பேசவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்பது போல் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. ஏற்கெனவே லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னை தவிர்த்து மாநிலத்தின் பிற ஊர்களில் குறிப்பாக மதுரை, கோவை மாதிரியான இடங்களில் வைக்கலாம் என்ற ஒரு பேச்சு போய்க் கொண்டிருந்தது.

ஆனால் இப்போது வந்த தகவலின் படி இசை வெளியீட்டு விழா மொத்ததில் இந்தியாவிலேயே இல்லையாம். மலேசியா அல்லது துபாய் இந்த இரு நாடுகளில் ஒரு நாட்டில் தான் நடக்க இருக்கிறதாம். அதனால் இந்த சூப்பர் ஸ்டார் பிரச்சினையை வெளி நாட்டில் போய் பேசி என்ன பிரயோஜனம்? அதனால் கண்டிப்பாக விஜய் இதை பற்றி பேசவே மாட்டார் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க : இப்படியா காப்பி அடிப்பாங்க!.. அரசியல் ரூட்டுக்கு அந்த நடிகரை அப்படியே ஃபாலோ பண்ணும் தளபதி!.

ஆனால் இன்று இணையத்தில் விஜயின் ஒரு பழைய மேடை வீடியோவை போட்டு ரசிகர்கள் வைரலாக்கிக் கொண்டிருந்தார்கள்.ஏதோ விழா மேடை. அதில் விஜய் ‘சினிமாவில் கண்டிப்பாக ஒரு இடத்திற்கு போக வேண்டும் என ஆசைப்பட்டது உண்மைதான். ஆனால் அது சூப்பர் ஸ்டாராக வேண்டும் என்று இல்லை’ என்று பேசியிருந்தார்.

இந்த வீடியோ மூலம் ஏற்கெனவே சூப்பர் ஸ்டார் பட்டம் பற்றி அப்பவே பேசியிருக்கேன், இப்போது என்ன பேச வேண்டும் என்ற மன நிலையில் இருக்கிறாரோ விஜய் என்றுதான் தோன்றுகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top