Connect with us
rajini

Cinema News

அவரு ரஜினி வெறியனாச்சே! தலைவர் 170ல் முதல் ஆளாக துண்ட போட்ட நடிகர் – ஆனால் ஒரு கண்டீசன்

ரஜினியின் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ஜெய்லர். இந்தப் படம் வருகிற 10 ஆம் தேதி அனைத்து திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது. வெளி நாடுகளில் அதற்கான முன்பதிவு தொடங்கி கோடிக்கணக்கில் டிக்கெட் விற்பனையாகியுள்ளது.

தமிழ் நாட்டிலும் படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றது. டிரெய்லர் வெளியானதில் இருந்து படத்தை பற்றிய அப்டேட்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. முற்றிலும் வித்தியாசமாக நெல்சனின் மறு வெர்சனாக இந்தப் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க : ரஜினி, விஜய் ரெண்டு பேரும் ஓரமா போங்க!.. மேல ஒருத்தர் இருக்கார்!.. கொளுத்திப்போட்ட ரோபோசங்கர்…

டார்க் காமெடிக்கு பஞ்சமிருக்காது என்பதை போல யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் இருக்கின்றனர். மொத்தத்தில் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பதை இன்னும் 5 நாள்களில் பார்க்கப்போகிறோம்.

இதனை அடுத்து லால்சலாம் படத்திலும் ஒரு கேமியோ ரோலில் நடித்திருக்கிறார் ரஜினி. ஒரு இஸ்லாமியராக  நடிக்கும் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நிரோசா இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்திலும் எப்படி பட்ட கேமியோ ரோல் என்பதில் எதிர்பார்ப்பு இருக்கின்றது.

rajini1

rajini1

ஜெய்லர் படத்தை முடித்த கையோடு தனது 170வது படமான ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளார் ரஜினி. இந்தப் படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் நேற்று தான் நடைபெற்றது. பிரபல பாலிவுட்டை சேர்ந்த ஒரு சிகை அலங்காரம் செய்யும் ஒருவரை வைத்து லுக் டெஸ்ட் நடத்தியிருக்கின்றனர்.

இந்த நிலையில் தலைவர் 170 படத்தில் நடிக்க ஆர்வமுள்ள நடிகர்கள் விண்ணப்பிக்கலாம் என்ற ஒரு விளம்பரத்தை பதிவிட்டிருக்கிறார்களாம். ஆனால் இதில் நடிக்க ஆர்வமுள்ளவர்கள் கண்டிப்பாக கூத்துப் பட்டறையில் இருந்து வந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் ஃபிலிம் இன்ஸ்ட்டியூட்டில் படித்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் கண்டீசன் போட்டுள்ளார்களாம்.

இதையும் படிங்க : சொல்றதையும் செய்வேன்! சொல்லாததையும் செய்வேன் – ஹுக்கும்! கண்டம் தாண்டி மாஸ் காட்டிய ரஜினி

இது ஒரு பக்கம் இருக்க பிரபல தெலுங்கு நடிகர் நானி இந்தப் படத்தில் இணைந்திருக்கிறாராம். ஏற்கெனவே நானி ஒரு தீவிர ரஜினி ரசிகன். ரஜினியின் ஸ்டைல்களை முழுவதுமாக அப்படியே இமிடேட் செய்தே படம் முழுக்க நடித்திருப்பார். பல பேட்டிகளில் நான் பக்கா ஒரு ரஜினி ரசிகன் என்றும் சொல்லியிருப்பார். முதல் ஆளாக தலைவர் 170 படத்தில் நுழைந்திருக்கிறார் நானி.

google news
Continue Reading

More in Cinema News

To Top