விக்ரம் பேய் ஹிட்டு.! தேவர் மகன் 2, சபாஷ் நாயுடு, இந்தியன்-2.?! ஆண்டவர் ஆட்டம் ஆரம்பம்...

விஸ்வரூபம்-2 படத்திற்கு பிறகு சில வருடங்கள் சினிமாவுக்கு இடைவெளி விட்டு இருந்த உலகநாயகன், தற்போது விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து மீண்டும் புத்துயிர் பெற்று புத்துணர்ச்சியுடன் சினிமாவில் செயல்பட்டு வருகிறார்.
அடுத்து, பிரமாண்டமாக படைப்பான இந்தியன்-2 திரைப்படம் உருவாவதற்கு வாய்ப்புகள் கனிந்து வருகின்றன. அதற்கு உதயநிதி ஸ்டாலின் மிகவும் உறுதுணையாக தற்போது செயல்பட்டு வருகிறாராம். லைகா நிறுவனம் அதற்கு ஈடு கொடுத்து அதற்கான வேலைகளை முடுக்கி விட்டுள்ளதாம்.
அதேபோல் கமல்ஹாசனும், தான் ஏற்கனவே நிறுத்தி திட்டமிட்டு இருந்த தேவர் மகன் இரண்டாம் பாகம் மற்றும் சபாஷ் நாயுடு ஆகிய படங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளாராம்.
அதில் முக்கியமாக சபாஷ் நாயுடு திரைப்படம் சில நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றது பிறகு அது நின்று போனது. தற்போது முதல் வேலையாக சபாஷ் நாயுடு திரைப்படத்தை மறு உருவாக்கம் செய்யும் பணிகளில் கமல்ஹாசன் தரப்பு ஈடுபட்டுள்ளதாம்.
இதையும் படியுங்களேன் - சோப்பு வித்துதான் ஒரு வேலை சாப்பிடுறேன்.! சவுண்ட் சரோஜாவின் தற்போதைய பரிதாப நிலைமை!...
அதேபோல தேவர் மகன் இரண்டாம் பாகத்தில் கமல்ஹாசன் மகனாக விஜய் சேதுபதியும், நாசர் மகனாக பகத் பாசிலும் நடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறதாம். அதற்கான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்க உள்ளதாம். விரைவில் தேவர் மகன்-2 மற்றும் சபாஷ் நாயுடு ஆகிய படங்களின் அப்டேட் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதற்கிடையில் இந்தியன்-2 பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.