பாக்கத்தான் ரெமோ! மகன் விஷயத்தில் அந்நியனா மாறிய விக்ரம்.. ‘பைசன்’ படத்திற்காக இப்படியா?

Published on: May 13, 2024
vikram
---Advertisement---

Actor Vikram: கோலிவுட்டில் நடிப்பில் ஒரு அசுரனாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விக்ரம். வெவ்வேறு கெட்டப்புகளில் விதவிதமான காஸ்டியூம்களில் நடித்து ஒட்டுமொத்த மக்களின் அன்பை பெற்றவர் விக்ரம். சேது படத்திற்கு முன்பு எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் விக்கிரமுக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது சேது திரைப்படம் தான்.

சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் களமிறங்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் அந்த காலகட்டத்தில் சேது படம் ஒரு பாடமாக அமைந்தது. அந்த அளவுக்கு விக்ரம் தன்னை மிகவும் வருத்தி நடித்த படமாக சேது படம் அமைந்தது. தேசிய விருதுவரை சென்ற இந்த படத்தால் விக்ரமுக்கு மிகப்பெரிய அந்தஸ்து கிடைத்தது. அதனை தொடர்ந்து பல படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பும் கிடைத்தது.

Also Read

இதையும் படிங்க:கமல் செய்ததை மறக்கவே முடியாது!.. யாரும் செய்ய மாட்டாங்க!.. நெகிழும் ஜனகராஜ்…

அந்தப் படம் போட்ட விதைதான் இன்று மிகப்பெரிய ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. அந்நியன், பொன்னியின் செல்வன் இப்போது தங்கலான் வரை அவருடைய வளர்ச்சி படத்திற்கு படம் வித்தியாசமாகவே இருக்கின்றது. இந்த நிலையில் இவருடைய மகனும் நடிகருமான துருவ் விக்ரம் தன் தந்தையைப் போல எப்படியாவது கோலிவுட்டில் கால் பதிக்க வேண்டும் என்ற முயற்சியுடன் இறங்கி இருக்கிறார்.

ஆனால் அவர் நடித்த இரண்டு படங்களும் அவருக்கு ஒரு நல்ல வரவேற்பை பெற்று தரவில்லை. இப்போது மாரி செல்வராஜுடன் பைசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு சமீபத்தில் தான் ஆரம்பிக்கப்பட்டது. துருவ் விக்ரமுக்கு பின்னாடி விக்ரம் ஒரு பக்கபலமாக இருந்து வருகிறார். அது மட்டுமல்லாமல் விக்ரம் ஆரம்பத்தில் எந்த அளவு கஷ்டப்பட்டாரோ அதற்கு எதிர்மறையாக துருவிக்ரம் இருக்கிறார்.

இதையும் படிங்க:‘துப்பறிவாளன்’ படம் விஷாலுக்கு எழுதுனதே இல்ல! முதலில் யார் நடிக்க இருந்தார் தெரியுமா? மிஷ்கின் சொன்ன சீக்ரெட்

ஏனெனில் பார்ன் வித் சில்வர் ஸ்பூன் என சொல்வார்கள். அப்படி செல்வ செழிப்பில் வளர்ந்தவர் துருவ்விக்ரம். ஆனால் இந்த சினிமாவில் எந்த அளவு கஷ்டம் இருக்கும் என்பதை தன் மகனும் அறிய வேண்டும் என்பதற்காக துருவ் விக்ரமை பைசன் திரைப்படத்திற்காக திருநெல்வேலியிலேயே தங்க வைத்து கபடி கற்றுக்கொள்ள செய்திருக்கிறார் விக்ரம். அதோடு இல்லாமல் அங்கு கபடி விளையாடும் இளைஞர்களுடன் தான் தங்க வேண்டும். அவர்கள் சாப்பிடும் சாப்பாட்டைத்தான் சாப்பிட வேண்டும். அவர்களுடனே இருக்க வேண்டும்.

அப்பொழுதுதான் அவர்கள் எந்த அளவு கபடிக்காக தங்களை வருத்திக் கொள்கிறார்கள் என்பதை நீ அறிய வேண்டும் என தன் மகனிடம் கூறியிருக்கிறாராம். இதை அறிந்த மாரி செல்வராஜ் விக்ரமின் இந்த பக்குவம் அவருக்கு மிகவும் பிடித்த போக துருவ் விக்ரமை என்னிடமே ஒப்படைத்து விடுங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன் என கூறினாராம். அதனால் விக்ரமுக்கு சேதுபடம் எப்படி ஒரு திருப்புமுனையாக அமைந்ததோ அதேபோல தன்னுடைய மகன் துருவ் விக்ரமுக்கும் பைசன் திரைப்படம் ஒரு திருப்புமுனையாக அமையும் என மிக நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறார் விக்ரம்.

இதையும் படிங்க: இளையராஜா போடுறது வேஷம்!.. அது யாருக்கும் புரியாது!.. உண்மைகளை உடைக்கும் பிரபலம்..