More
Categories: Cinema News latest news tamil cinema gossips

விக்ரம் வாங்கினால் விஜய் தருகிறோம்.! தளபதி மனசுல என்ன இருக்குனு தெரியாம பேசுறீங்களே.?!

தமிழ்சினிமாவில் அடுத்ததாக ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள படம் என்றால் அது விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் தான். இயக்குனர் அஜய் ஞானமுத்து இந்த படத்தை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள், ஆகிய படங்கள் ஹிட்டாகியுள்ளன. அதனால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது.

Advertising
Advertising

இந்த திரைப்படத்தில் விக்ரம் பல கெட்டப்புகளில் வருவதாலும், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருப்பதாலும்,  படத்தின் டீஸரும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளதாலும் இந்த படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

வழக்கமாக இருக்கும் விக்ரமின் மார்க்கெட்டை விட இந்த திரைப்படம் அதிகமாக விலை பேசப்படுகிறதுதாம். அதனால் விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்கள் இந்த படத்தை வாங்குவதற்கு சற்று யோசித்து வருகின்றனராம்.

இதனை கவனித்த தயாரிப்பாளர் லலித்குமார், இந்த படத்தை வாங்கினால் அடுத்த படமான தளபதி விஜய் – லோகேஷ் கனகராஜ் இணையும் ‘தளபதி 67’ திரைப்படத்தை உங்களுக்கு தருகிறேன் என்று பேச்சுவாக்கில் வாக்குறுதி கொடுத்திருக்கிறாராம்.

இதையும் படியுங்களேன் – கடுப்பாகிய படக்குழு.! உங்க சகவாசமே வேணாம் என நடையை கட்டிய அஜித்குமார்.!

தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் படத்தை மாஸ்டர், கோப்ரா படத்தை தயாரித்துள்ள அதே  லலித் குமார் தான் தயாரிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் விஜய் – லோகேஷ் இணையும் படத்தை தயாரிக்க ஏற்கனவே கமல்ஹாசன் , உதயநிதி என போட்டி பலமாக இருக்கிறது. இதன் காரணமாக விஜய் தான் இந்த விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார். அனேகமாக விஜய் பிறந்த நாளன்று தளபதி 67 படத்தின் அறிவிப்பு இருக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Published by
Manikandan

Recent Posts