தெறி மாஸாக கமல்ஹாசன்!....தாறுமாறா வைரலாகும் ‘விக்ரம்’ ஷூட்டிங் போட்டோ....

by சிவா |
vikram
X

நடிகர் கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறார். மாநாடு, கைதி, மாஸ்டர் ஆகிய படங்களுக்கு பின் லோகேஷ் இயக்கும் 4வது படம் இது.

இப்படத்தில் மலையாள நடிகர் பஹத்பாசில், விஜய் சேதுபதி, ஷிவானி நாராயணன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

vikram

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. பின்னர் 2ம் கட்டப்படப்பிடிப்பு காரைக்காலில் துவங்கியது. தற்போது இந்த படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. 3ம் கட்டப்படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

இந்நிலையில், 2ம் கட்டப்பிடிப்பு முடிந்த போது படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதில் கமல்ஹாசன் பைக்கின் மீது ஸ்டைலாக அமர்ந்திருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் மற்றும் இப்படத்தில் சண்டை காட்சிகளை அமைக்கும் அன்பறிவு சகோதரர்கள் நின்று கொண்டிருக்கின்றனர். இவர்கள்தான் கேஜிஎஃப் படத்திற்கும் சண்டை காட்சிகளை அமைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புகைப்பத்தை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

vikram

Next Story