விக்ரம் ரசிகர்களுக்கு அன்லிமிடெட்டாக அப்டேட்களை கொடுக்கும் பவர் ஹவுஸ் டீம்!
விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘பவர் ஹவுஸ்’.

‘சீயான்’ விக்ரம் கடைசியாக நடித்த ‘வீரதீரசூரன்’ படம் வெளியாகி ஒன்றரை வருஷம் ஆச்சு. கெளதம் மேனன் இயக்கதுல நடிச்ச ‘துருவ நட்சத்திரம்’ இப்போதைக்கு ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்ல.
‘சீயான் 63’ தான் அடுத்து திரையரங்குகளில் வெளியாகப் போகும் விக்ரம் படம். ‘இருமுகன்’ படம் பண்ண ஆனந்த் ஷங்கர் இயக்குற இந்த படத்துல முக்கிய கேரக்டர்ல ரியா ஷிபு நடிக்கிறார்.
இதுக்கு சமீபத்துல தான் ‘பவர் ஹவுஸ்’-ன்னு டைட்டில் வைத்திருக்கிறதா அதிகாரப்பூர்வ அறிவிப்பு டீசர் வெளியாச்சு. இந்த டீசர் விக்ரம் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்தது.

தற்போது, இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பை துவங்கியுள்ளதாக ஆனந்த் ஷங்கர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் அறிவித்துள்ளார். படம் அடுத்த ஆண்டு (2027) பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.












