கெட்டவார்த்தை போட்டு கமல் சார் நடிப்பை நிறுத்திட்டேன்.! அவரிடம் இப்டிலாம் பேசலாமா லோகேஷ்.?

by Manikandan |
கெட்டவார்த்தை போட்டு கமல் சார் நடிப்பை நிறுத்திட்டேன்.! அவரிடம் இப்டிலாம் பேசலாமா லோகேஷ்.?
X

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை ரிலீஸாக உள்ள திரைப்படம் விக்ரம். இந்த திரைப்படம் தமிழ் மட்டுமல்லாது, இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ஒரு பான் இந்திய திரைப்படமாக ரிலீசாக உள்ளது.

vikram2_cine

இந்த திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் என பலர் நடித்துள்ளனர். சூர்யா ஒரு முக்கிய தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் அனுபவங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அண்மை காலமாக பல்வேறு பேட்டிகளில் தெரிவித்து வருகிறார்.

அப்போது ஒரு வீடியோவில் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், விக்ரம் படத்திற்கான முதல் காட்சியை கமல் சார் அலுவலகத்தில் வைத்து இருந்தோம். அவரது கண்களை மட்டும் குளோஸ் அப்பில் வைத்து காட்சி எடுத்து இருந்தோம். அப்போது கமல் நடிக்க, நான் ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன் சொன்னேன்.

முதன்முறையாக மானிட்டர் வழியாக கமல் சார் நடித்ததை பார்த்து, நான் மெய் மறந்து விட்டேன். அப்போது கெட்ட வார்த்தை சொல்லி கத்திவிட்டேன். அது அவருக்கும் தெரியும். கட் சொல்வதை மறந்துவிட்டேன் என தெரிவித்து இருந்தார்.

இதையும் படியுங்களேன் - உன் உடம்பு இன்னும் புஸுபுஸுனு இருக்கனும்.! பிக் பாஸ் லாஸ்லியாவை வம்பிழுக்கும் மெகா ஹிட் இயக்குனர்.!

லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனின் தீவிர ரசிகர். தனது குருவாக நினைத்து இருந்த கமலை முதன்முதலாக இயக்கும்போது அந்த சந்தோஷத்தில் என்ன சொல்வது என்று தெரியாமல் இப்படி சொல்லிவிட்டாராம் கமல்.

இருந்தாலும் உலக நாயகன் கமல்ஹாசன் முன்னால் இப்படி கெட்ட வார்த்தை பேசி விட்டாரே என்று சில ரசிகர்கள் முணுமுணுக்கத்தான் செய்கிறார்கள். இதற்கெல்லாம் விடையாக விக்ரம் திரைப்படத்தின் ரிசல்ட் அமையும் என்றும் கூறப்படுகிறது.

Next Story