விக்ரம் பெரிய திரையில் தோன்றி கிட்டத்தட்ட 3 வருடங்கள் ஆகிவிட்டதால், இன்று வெளியான கோப்ரா படத்திற்காக விக்ரம் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதற்கேற்றாற் போல, பிரமாண்டமாக இந்த திரைப்படம் உலகம் முழுக்க வெளியாகி உள்ளது.
ஏற்கனவே, கோப்ரா இயக்குனர் அஜய் ஞானமுத்து இதற்கு முன் எடுத்த டிமாண்டி காலணி, இமைக்கா நொடிகள் ஆகிய படம் நல்ல வெற்றியை பதிவு செய்ததாலும், விக்ரம் கோப்ராவில் அதிக கெட்டப்களில் நடித்துள்ளார் , பெரிய பட்ஜெட் திரைப்படம், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை என்றதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது.
அதற்கேற்றாற் போல அநேக இடங்களில் அதிகாலை 4 மணி காட்சிக்கெல்லாம் தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. படமும் அதற்கு ஈடுகொடுத்து ரசிகர்களை ரசிக்க வைத்ததா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
படத்தின் கதைகதைப்படி, ஸ்காட்லாந்து இளவரசர் உட்பட சில உலக பிரபலங்கள் திடீரென கொள்ளப்படுகின்றனர். அவர்களை யார் கொள்வது என இன்டர்போல் போலீஸ் அதிகாரியாக வரும் இர்பான் பதான் தேடி வருகிறார். அதே வேளையில், சியான் விக்ரம் கணக்கு வாத்தி மதியழகனாக தமிழகத்தில் வாழ்ந்து வருகிறார். அவருக்கும் , ஸ்ரீநிதி ஷெட்டிக்கும் காதல், வளர்ப்பு தந்தை கே.எஸ்.ரவிக்குமார் உடனான காட்சிகள் என படம் நகருகிறது.
இதற்கிடையில் வில்லன் பாலிவுட் நடிகர் ரோஷன் மேத்யூ, அந்த கொலைகள் ஏன் நடக்கின்றன. அதற்கும் விக்ரமுக்கு என்ன பிரச்சனை, விக்ரம் எப்படி போலீஸ் கையில் சிக்குகிறார், எதற்காக அந்த கொலைகளை செய்தார் என படம் விறுவிறுப்பாக நகர முயற்சித்து இருக்கிறது.
கொடுத்த டிக்கெட் பணத்திற்கு முதல் பாதியே போதும் எனும் அளவிற்கு காட்சிகள் விறுவிறுப்பாக நகர்கிறது. அதிலும் அந்த இன்டெர்வல் டிவிஸ்ட் எல்லாம் வேற லெவல் தான். இப்படி ஒரு டிவிஸ்ட் யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால், அதன் பிறகான, காட்சிகள் கொஞ்சம் நெளிய வைக்கிறது என்றே கூறலாம்.
அதிலும் குறிப்பாக, 3 , ஆளவந்தான் படங்களில் வரும் அந்த கற்பனை மனிதர்கள் விக்ரமை டார்ச்சர் செய்வது, அம்மா சென்டிமென்ட பிளாஸ்பேக் ஆகியவை இரண்டாம் பாதியை கொஞ்சம் சோதிக்கிறது. அதிலும், கிளைமேக்ஸ் என்ன நடக்கிறது என கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ள்ளது அந்தளவுக்கு புத்திசாலித்தனமாக எடுக்கிறேன் என கொஞ்சம் ரசிகர்களை சோதித்து உள்ளனர்.
இதையும் படியுங்களேன் – விக்ரம் பட தழுவலா சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர்.? அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்..
மொத்தமாக படத்தின் பிளஸ் என பார்த்தால், மொத்த படத்தையும் தூக்கி சுமப்பது பாதி விக்ரம் என்றால் மீதி இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் தான். காட்சிகள் எப்படி இருந்தாலும் பிண்ணனி இசையில் எந்த குறையும் இல்லை எனும் அளவுக்கு பின்னணி இசை கொடுத்துள்ளார். படத்தில் விக்ரமுக்கு 9 கெட்டப்கள் இருக்கும். இந்த மாதிரியான கெட்டப்க்கு மெனெக்கெடுவதற்கு தன்னை விட்டால் வேறு யாரும் இல்லை எனும் அளவுக்கு மெனெக்கட்டு செய்துள்ளார் விக்ரம். படத்தின் கதை அருமை. திரைக்கதை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருக்கலாம்.
இதையும் படியுங்களேன் – நம்ம அட்லீ செஞ்ச வேலையால் அதிர்ந்து போன பாலிவுட்.! ஷாருக்கானுக்கு இப்போ வேற வழி இல்ல…
ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்துள்ளது. புவன் ஸ்ரீநிவாசன் எடிட்டிங் வேற லெவல். இதுதான் படத்தின் பிளஸ். மைனஸ் என்றால் முதலில் குறிப்பிடுவது படத்தின் நீளம். அடுத்து இரண்டாம் பாதியில் திரைக்கதை சொதப்பல்கள். பிளாஷ்பேக் காட்சி, காதல் காட்சிகள் என இவை தான் படத்தை பின்னோக்கி அழைத்து செல்கின்றன.
மொத்தத்தில் சியான் விக்ரம் நடிப்பில் கோப்ரா , அஜய் ஞானமுத்துவின் பரிசோதனை முயற்சி. இது வெற்றி பெற்றதா என்பது ரசிகர்களின் அடுத்தடுத்த நாள் தியேட்டர் வருகையை வைத்து தான் கண்டறிய முடியும். கோப்ரா முதல் பாதி சூப்பர். இரண்டாம் பாதி ஓகே. விக்ரம் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் – டபுள் ஓகே.
தனது தந்தை…
Sun serials:…
தமிழக வெற்றிக்கழகம்…
தமிழ் சினிமாவில்…
GoatMovie: விஜய்…